நாட்டின் இனப்பெருக்கம் பற்றிய தகவலை இனப்பரம்பலின் அடிப்படையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்கள் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்ட தகவலின் பிரகாரம் முஸ்லிம் மக்களின் இனப்பெருக்கம் 12 வீதமாகவும் சிங்கள மக்களின் இனப்பெருக்கம் 5.7 வீத மாகவும் தமிழர்களின் இனப்பெருக்கம் 1.5 வீத மாகவும் உள்ளதென அவர் தனது தகவலைப் பதிவு செய்துள்ளார்.
இத்தகவல் ஏலவே உணரப்பட்டதாயினும் புள்ளிவிபர ரீதியில் அவர் பட்டியல்படுத்திய போது, எங்கள் தமிழினத்தின் எதிர்காலம் குறித்த பயம் நம்மைத் தொற்றிக் கொள்ளவே செய்கிறது.
இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த நாட் டின் இரண்டாவது சனத்தொகை முஸ்லிம் மக்களாக இருப்பர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதனை நாம் கூறுவது முஸ்லிம் மக்களுக்கு எதிரானதன்று.
மாறாக முஸ்லிம் மக்களின் இன, மதப் பற்றின் வெளிப்பாட்டை நாம் சற்றேனும் உணர வேண்டும் என்பதேயன்றி வேறில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் நடந்த யுத்தமும் புலம்பெயர்வும் எங்கள் தமிழ்ச் சனத்தொகையைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டது.
இதுதவிர, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்பன காரணமாக திருமண வயதெல்லை அதிகரித்துச் செல்ல, மகப்பேற்றுக்கான வாய்ப் புக்களும் குறையத் தொடங்கின.
இவற்றுக்கு மேலாக, ஒன்று அல்லது இர ண்டு பிள்ளைகள் போதும். இப்போதிருக்கக் கூடிய பொருளாதாரச் சுமையில் அதிக பிள்ளை களைப் பெற்றெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் எங்கள் இனத்தின் பெருக் கத்தை கணிசமாக வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலைமையானது இந்த நாட்டின் மிகக் குறைந்த சனத்தொகை தமிழ் மக்களே என்ற ஒரு மோசமான சூழலை ஏற்படுத்தப் போகிறது.
அதேவேளை மத்திய அரசு விடுக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுச் செயற்பாட்டை அமுல் படுத்துவதில் எங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் சுகாதார வைத் திய அதிகாரி பணிமனைகளும் அதிதீவிரம் காட்டுவதையும் இங்கு குறிப்பிட்டுத்தானாக வேண்டும்.
தென்பகுதியில் இருந்து வருகின்ற அறி வுறுத்தல்களை, சுற்றுநிருபங்களைச் செய்து முடித்து அறிக்கை சமர்ப்பித்து விட்டால் அது போதும் என்றிராமல்;
அங்கிருந்து வருகின்ற அறுவுறுத்தல்களின் உள்நோக்கம் என்ன? அதனால் எங்கள் இனத்துக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் யாவை? என்பனபற்றியயல்லாம் ஆராய்ந்து செயற்படுவது தொடர்பில் எங்கள் தமிழ் அதி காரிகள் கருசனை கொள்ள வேண்டும்.
இதைவிடுத்து, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட் டத்தை கடுமையாக அமுலாக்கம் செய்து எங் கள் இனத்தைக் குறைப்புச் செய்வது தொடர் பில் எங்கள் மருத்துவ அதிகாரிகளும் துணை மருத்துவ சேவையாளர்களும் சிந்திக்க வேண் டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.
எல்லாவற்றுக்கும் மேலாக எம் இனத்தின் அதிகரிப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுவதும் மிகமிக அவசியமானதாகும்.