
சட்டம்,ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க சுதந்திரக்கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதால், அதனை அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்கு வழங்கியாவது கடந்த ஆட்சிகாலங்களில் மக்கள் பண த்தை சூறையாடிய திருடர்களை கைது செய்யும்படி தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்ய முடியா விட்டால் மக்கள் பணத்தை கொள்ளையிட்ட திருடர்களைப் பிடிக்க முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு ஒட்டு மொத்த மக்களிடத்திலும் ஸ்ரீலங்கா அரசா ங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்து ள்ளாா்.
ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்ச ரவை மாற்றத்தின் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவிடாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்ததாக தெரிவி க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை இலக்கு வைத்து அதிரடி நடவடிக்கைகளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேற்கொ ள்வார் என்பதை சுட்டிக்காட்டியே சுதந்திரக் கட்சியினர் இவ்வாறு எதிர்ப்பு தெரி விப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொழும்பு மட்டக்குளியில் அமைந்துள்ள போதி சமுத்ரா ராமவிஹாரையில் நடைபெற்ற சமய நிகழ்வில் தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் கலந்துள்ளாா்.
விகாரையில் சமய வழிபாட்டிலும் ஈடுபட்ட அமைச்சர் மனோ கணேசன், விகா ராதிபதியுடன் கலந்துரையாடலையும் நடத்தினார். அதன் பின்னர் சமகால அரசியல் விவகாரம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியு ள்ளாா்.