ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “நல்லுறவை பேண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் தெளிவற்றவையாகவும் போதுமானதாகவும் இல்லை.
அத்துடன், உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல போதுமான ஆதரவை அளிக்க அரசும் அவ்வப்போது தவறி வருகிறது.
மிகக் கொடூரமான இன அழிப்பு காலகட்டத்தில் துயரத்தை அனுபவித்தவன் என்ற முறையில், UNHRC மற்றும் முந்தைய உயர் ஆணையாளர் ஆகியோரது பங்களிப்பில் எமக்கு முழு திருப்தி உள்ளது.
எனினும், இலங்கை அரசு அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த தவறியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மறுக்கும் இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் மன்றத்தையோ, சர்வதேச சமூகத்தையோ மதிக்கத்தவறியுள்ளது.
தமிழர்கள் இன அழிப்பு காலத்தில் அனைத்தையும் இழந்தோம், இராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டு செல்வதை கண்கூடாக காண முடிந்தது” என அவர் மேலும் கூறியுள்ளார்.