குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆளுநர்கள் அனைவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர்களும் இதற்கு முன்னர் வேறு மாகாணங்களில் பணியாற்றியிருந்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே மாகாணத்தில் பணியாற்ற முடியாத நிலையில் வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ கலந்துகொண்டிருந்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விபரங்கள் பின்வருமாறு,
01. மேல் மாகாணம் - ஹேமகுமார நாணயக்கார
02. வட மேல் மாகாணம் - கே.சி. லோகேஸ்வரன்
03. சபரகமுவ மாகாணம் - நீலூகா ஏக்கநாயக்க
04. மத்திய மாகாணம் - ரெஜினோல்ட் குரே
05. தென் மாகாணம் - மார்ஷல் பெரேரா
06. வட மத்திய மாகாணம் - எம்.ஜி. ஜயசிங்க
07. ஊவா மாகாணம் - பி.பீ. திஸாநாயக்க
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தொடர்ந்தும் பதவியில் நீடிக்கும் அதேவேளை வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த அமரா பியசீலி ரத்நாயக்கவுக்கு புதிய ஆளுனர் பட்டியலில் இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.
அதே நேரம் வட மாகாணத்திற்கான ஆளுநர் பதவி தற்போதைக்கு வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.