எமது நாட்டு மக்கள் ஆட்சியா ளர்களால் தீவிர இனவாத அரசியலுக்குள் தள்ளப்பட்டுள் ளார்கள்
என தெரிவித்த மக்கள் விடுதலை முன் னணியின் தலைவர் அனுர குமார திஸ்ஸ நாயக்க, இனவாதத்துக்கு எதிராக சகல மக்க ளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் சக்தியை உருவாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மே தினகூட்டம் நேற்று யாழ்.முற்றவெளியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரை யாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித் தார்.
யாழில் இடம்பெறும் மே தினம் சரித்திரம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது.
எமது நாட்டில் எந்தவித பாகுபாடும் இன்றி தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டியுள்ளது.
ஒடுக்குமுறை அநீதிக்கு எதிராக ஒன்று சேர் ந்து போராட வேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் எமது நாட்டை விட்டு சென்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கொண்டாடுகிறார்கள்.
ஆனால் அண்மையில் அறிக்கை ஒன்று வெளியானது அதில் மந்த போசனை உள்ள வர்கள் இலங்கையில் 22 சதவீதமானவர் கள் உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போசாக்கின்மையால் வாடுகிறவர்களை தான் கடந்த கால அரசு உருவாக்கியுள்ளது. வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத நலிவடை ந்தவர்களை உருவாக்கியுள்ளார்கள்.
எமது பிள்ளைகளுக்கு சரியான உணவை கொடு க்கும் வருமானத்தை பெற்றுக்கொடுக்காத அரசாங்கம், என்ன அரசாங்கம்?
அத்துடன் கடன்காரர் நிறைந்த நாடு எமது நாடு. மாபெரும் கடன் பொறியில் எமது நாட்டு பிரஜைகள் சிக்கியுள்ளார்கள்.
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்று கொடுக்காத அரசு சாதாரண நபர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்று கொடு ப்பார்களா? மாற்றங்கள் ஏற்படும் என நினை க்கிறீர்களா? மாற்றம் நடக்காது. தொழில் துறைகள் பல மூடப்பட்டுள்ளது. இங்குள்ள ஆட்சியாளர்கள் இருப்பதை மூடிவிட்டு விற்றா ர்கள்.
நாம் எதையும் அறியாது வருகிறோம் போகிறோம். ஒடுக்குமுறைக்குட்பட்டுள் ளோம். நாம் படும் துன்பம் எமது பிள்ளைக ளுக்கு கொடுக்க வேண்டுமா? இவை மாற புதிய சக்தி கட்டியெழுப்பப்பட வேண்டும்.
எமது மக்கள் 30 வருடங்களாக பாரிய யுத்தத்துக்கு முகம் கொடுத்தார்கள். இராணு வம், இந்திய இராணுவம், தமிழ் ஆயுத குழு க்களால் பாதிக்கப்பட்டார்கள், அவர்களால் சுட்டு கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு அஞ்சி பயந்து வாழ்ந்தார்கள். மனைவி, கணவன், பிள்ளைகள், காணி, வியாபாரம், வீடு என்பவ ற்றை இழந்து பாரிய நெருக்கடிக்குள்ளான பிரதேசமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசத்தை கட்டியெழுப்ப எத்தனையோ விடயங்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள மக்களின் வாழ்க்கை எதியோப் பியாவை போல உள்ளது. என்ன அபிவிரு த்தி செய்தார்கள்.
எந்த ஒரு பிரச்சினையும் தீர்க்க முடியாத ஆட்சியாளர்கள் தான் தற்போது உள்ளார்கள்.
காணாமல் போனவர்கள் பிரச்சினை, காணி பிரச்சினை, கல்வி தேவை என்பவற்றை பூர்த்தி செய்யாதுள்ளார்கள்.
இதில் மாற்றம் கொண்டுவர மாட்டார்கள். இதையும் விட கடும் பாதாள அழிவை நோக்கி கொண்டு செல்ல போகிறார்கள்.
இதை தடுக்க ஒன்றிணைந்து போராட உள்ளோம். ஆட்சியாளர்களுக்கு எதிராக இரண்டு தடவை ஆயுதம் ஏந்;தி போராடினோம்.
குறிக்கோள் எதுவானாலும் ஆயுதம் ஏந்தி போராடியுள்ளார்கள். வடக்கு தெற்கு என போராடி பலர் உயிர் நீத்தார்கள். மீண்டும். அநீதி ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்றாக போராட வேண்டியுள்ளது.
70வருட ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். எமக்கு தெரியும் அது நடக்காது. தமிழ் சிங் கள முஸ்லிம் மக்கள் தீவிர இனவாத அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தற்போது பிரபல்யமான அரசியல் இனவாத அரசிய லாக மாறியுள்ளது. அவ்வாறான அரசியல் வாதிகள் மக்களை பிரிப்பதில் குறியாக உள் ளார்கள்.
ஒவ்வொரு இன மக்களும் ஏனைய இனத்தவரை சந்தேக கண் கொண்டு பார் க்கின்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பிரச்சினையையும் பெரிய பிரச்சி னையாக இனவாத விசத்தை விதைத்துள் ளார்கள். தெற்கிலும் வடக்கிலும் பிரபலமான இனவாத அரசியல் தோன்றியுள்ளது. புதிய அரசியல் சக்தி எமக்கு வேண்டும். இனவாத த்துக்கு எதிராக சகல மக்களுக்கு ஒன்றி ணைத்து போராட வேண்டும். அநீதிக்கு இன வாதத்துக்கு எதிராக போராட்டமாக இருக்க வேண்டும்.
மேலும் தற்போது விஞ்ஞான ரீதியான அமைச்சரவை என தெரிவித்து சங்கீத நாற்காலியில் இருப்பது போன்று அமைச்சர வையை பிரித்து கொடுத்துள்ளார்கள்.
அதேபோன்று கடந்த ஆட்சியில் ஜே. ஆர்.ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகார த்தை பிரயோகித்து குருநாகலில் இருந்து ஆட்களை கொண்டு வந்து யாழ் நூலகத்தை எரித்தார். அதன் பின்னர் கறுப்பு ஜீலை நிர் மாணித்தார்கள்.
பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள். இதற்கு காரணம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தான். அழிவு மிகு ஜனநாயத்துக்கு முரணான இந்த முறை இல்லாது ஒழிக்க நாம் செயற்படுகிறோம்.
வடக்கிலும் தெற்கிலும் நாம் வேகமாக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். வட க்கில் எம்மை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஒன்று சேர்வோம் என நம்புகிறோம். வட க்கில் ஒன்றாக போராட இந்த மே தின கொண்டாட்டம் ஆரம்ப புள்ளியாக அமை ந்துள்ளது. எனவே புதிய அரசியல் சக்தியை உருவாக்க ஒன்றிணைவோம் என மேலும் தெரிவித்தார்.