இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள்....

இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியானது
இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியானதுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் திகதி 1992/25 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட, பெயர் குறிக்கப்பட்ட நபர்கள் பற்றிய நிரல், இரண்டாம் அட்டவணையின் முடிவில், அதற்கான “தனியாட்கள்” என்ற தலைப்பின்கீழ் இதற்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாறன், கமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல், அன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் அல்லது பரதன், சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது கணேஸ் அல்லது சாம்ராஜ், பொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன், வேலாயுதம் பிரதீப்குமார் அல்லது கலீபன், சிவராசா சுரேந்திரன் அல்லது வரதன், சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன்.
மற்றும் திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன், மகேஸ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மென்டிஸ் அல்லது திருக்குமரன், சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர், டோனி ஜியான் முருகேசபிள்ளைஆகியோருக்கு இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக படிக்க இங்கே அழுத்தவும்..
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila