இலங்கைப் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துவந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் பொலிஸ் மா அதிபரை சந்தித்துள்ளார்.