![]()
அனுராதபுர சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளில் இருவரை மாத்திரம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியும் என்றும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி சாதகமான நகர்வுகளை முன்னெடுக்கவும் முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய மூவரையும் விடுவிக்க முடியாதென்றும் அரசாங்கம் கைவிரித்துள்ளது.
|
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் இன்று நீதியமைச்சில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர். இதன்போதே அரசாங்கத்தின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இதேவேளை தண்டனை பெறப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
|
அரசியல் கைதிகள் விடுதலை குறித்த இன்றைய பேச்சும் பிசுபிசுப்பு! - நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் சம்பந்தன்
Related Post:
Add Comments