தமக்கு யார் தேவை என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பர்

நேற்றைய தினம் வடக்கு மாகாண முன் னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற் றைய தினம் நல்லூரில் நடந்த மாபெரும் மக் கள் எழுச்சிக் கூட்டத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புத் தொடர்பில் அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அத் தனை விடயங்களையும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

இதில் தனது நிலைப்பாட்டை - நியாயப் பாட்டை முன்வைத்த நீதியரசர், மக்கள் விரும் பினால் என்னை ஏற்றுக் கொள்ளட்டும். இல் லையேல் நிராகரிக்கட்டும் எனப் பட்டவர்த்தன மாகக் கூறியிருந்தார்.

இங்குதான் அவர் கூறிய அந்த விடயம் முதன்மை பெறுகிறது. 
நீதியரசர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களுக்கான இலக்கை நோக்கிப் பயணிக்கவுள்ளார்.

ஏலவே தான் சார்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் இருக்கக்கூடிய அதி ருப்தியையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இங்குதான் மக்கள் தீர்ப்பு என்ற விடயம் எழுகிறது. அதாவது புதிய அரசியல் கட்சியை நீதியரசர் ஆரம்பித்திருக்கின்றார் என்பது தொடர்பில் அரசியல் தரப்பு எதுவும் குழம்பத் தேவையில்லை.

ஏனெனில் மக்கள் விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளட்டும், இல்லையேல் நிராகரிக் கட்டும் என்பது கருத்து. அந்தக் கருத்து நியாயமானது.

அதேநேரம் தமிழ் அரசியல் தரப்புகளாக ஏலவே இயங்கு நிலையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைக் குப் பாத்திரமாக நடந்திருந்தால், அதனை எங்கள் மக்களிடம் தெரிவிக்கட்டும்.

தமிழ் மக்கள் நம்பி வாக்களித்ததற்கு விசு வாசமாக நேர்மையாக நீங்கள் நடந்திருந்தால் அதனை தமிழ் மக்களிடம் எடுத்துக் கூறுங் கள். யார் தங்களின் அரசியல் தலைமை என் பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

எதுவாயினும் சமகாலத் தமிழ் அரசியல் தலைமை விட்ட தவறுகளும் மேண்டுமென்றே தமிழினத்துக்குச் செய்த அநீதிகளும் உச்சம டைந்த நிலையிலேயே தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனை வலுப் பெற்றது என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழினம் வாழ்வதற்காக இந்த மண்ணில் நடந்த மிகப்பெரும் தியாகங்களையயல்லாம் மறந்து தாம் நினைத்தபடி செயற்பட முடியும் எனக் கொழும்பைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தமிழ் அரசியல் தலைமை எப் போது நினைத்ததோ அன்றுதான் அவர்கள் மீது தமிழ் மக்கள் வெறுப்புக் கொண்டனர்.

இதன் விளைவு புதிய அரசியல் தலைமை தேவை என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. அந்தக் கடமையை நீதியரசர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார். இனி இதனை வழிப்படுத்திச் செல்வது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila