இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம், ரணிலை ஜனாதிபதி ஆக்குவோம், சஜித்தை பிரதமராக்குவோம், மைத்திரியே உன் அரசியல் அதிரடி எல்லாம் இராத்திரியே, ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனே நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேவின் அண்மைக்கால செயற்பாடுகள் ஜனநாயக விரோதமாக காணப்படுவதாக போராட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி முகாமையாளர் ஜேம்ஸ் ப்ரிமிளஸ், மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமியு முஹமது பஸ்மி உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.



