![]()
புதிய அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட சகல அரச நிறுவனங்களின் தலைவர்களது தகுதி, அனுபவங்கள் பற்றிய விபரங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் புதிய குழுவொன்றை நியமித்திருக்கிறார்.
|
இந்த குழுவின் விதந்துரைகளுக்குப் பின்னரே நியமனங்ளை செய்யுமாறு அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி சிறிசேன அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரியவருகிறது. இதன் விளைவாக அரச நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் ஒரு முடக்க நிலைக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத் துறையில் உயர்மட்ட பதவிகளுக்கான நியமனங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கே மேற்படி குழுவை ஜனாதிபதி நியமித்திருப்பதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதனால் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
|
அமைச்சர்களுக்கு கடிவாளம் போடும் ஜனாதிபதி!
Add Comments