அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு வருகிறது. இத் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் தீவிரமாக களமிறங்கினார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
நிற வெறிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர் கமலா. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது.