பிரகீத் காணாமல் போய் 5 வருடங்கள்- பிரகீத்தை காணாமல் போகச் செய்த ராஜபக் அரசு காணாமல் போய்விட்டது

பிரகீத் காணாமல் போய் 5 வருடங்கள்- பிரகீத்தை காணாமல் போகச் செய்த ராஜபக் அரசு காணாமல் போய்விட்டது:-


இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.

இவர் இலங்கை அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்துக் காணாமல் போனார்.

இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர், ஆனாலும் இதனை அரசாங்கள் மறுத்துள்ளது[4].

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி "போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்' என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர்.

எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரகீத் எக்னெலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கடத்தி வைத்திருக்கின்றார் என்று அவரின் மனைவியான சந்தியா எக்னெலிகொட குற்றஞ்சாட்டி பிரகீத் எக்னெலிகொடவை விடுவிக்கக் கோரி அண்மையில் அலரி மாளிகைக்கு முன்னால்  சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.

எவ்வாறாயினும் பிரகீத்தை காணாமல் போகச் செய்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசும் அதே காலத்தில் காணாமல் போகும் நிகழ்வும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. பிரகீத் இன்னமும் திரும்பவில்லை.

குளோபல் தமிழ் செய்தியாளர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila