கோத்தாபய குண்டுவெடிப்பில் சிக்கிய வாகனமும் மீட்பு:: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
முன்னைய அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் மீள ஓப்படைக்கப்படாத 50 ற்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றில் குண்டுதுளைக்காத வாகனங்களும் உள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் கொழும்பின் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மீடகப்பட்டு உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
128 வாகனங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காணமற் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
53 வாகனங்களும் எவ்வாறு அந்த இடத்திற்கு வந்தன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றோம் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல வாகனஙகள சேதமடைந்துள்ளன, சில அவசரஅவசரமாக கைவிடப்பட்டுள்ளன போல தோன்றுகின்றது, அவற்றினுள் உணவுகள், தண்ணீர் போத்தல்கள் காணப்படுகின்றன, இவற்றில் அனேகமானவை குண்டு துளைக்காதவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2006 இல் கொழும்பில்இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கிய பிஎம்டபில்யு வாகனமும் இங்கு காணப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீதான குண்டுதாக்குதலில் இந்த வாகனம் சிக்கியிருந்தது.