அலரிமாளிகையின் முன் ஆர்ப்பாட்டம்


news  காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எகலியகொடவை விடுவிக்ககோரி  இன்று காலைஅலரிமாளிகையின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றது.



ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எகலியகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று கடத்தப்பட்டு காணாமல்போனார். லங்காநியூஸ் கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.
 
 
 
இதன்போது கருத்து தெரிவித்த அவரது மனைவி சந்தியா எக்னலியகொட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தனது கணவனைக் கடத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila