இலங்கை - சீனா - இந்தியா! மாற்றம் காணும் உறவுகள்

இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்­சி­ மாற்றம் இந்­தி­யா­வுக்கு மகிழ்ச்­சி­யையும் உற்­சா­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள அதே­வேளை, சீனா­வுக்கு கவ­லை­யையும் கலக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
கடந்த 9ம் திகதி காலையில், அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேற மஹிந்த ராஜபக்ச முடி­வெ­டுத்த போதே, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்றி உறு­தி­யா­யிற்று. உட­ன­டி­யா­கவே புது­டில்­லியில் இருந்து ஜனா­தி­பதி செய­லகம் மூலம் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வாழ்த்துத் தெரி­வித்தார்.
டுவிட்­ட­ரிலும் வாழ்த்தை பதிவு செய்த அவர் பின்னர், நேர­டி­யா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைத் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்­தினார். அதை­ய­டுத்து, வாழ்த்துக் கடிதம் ஒன்­றையும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கொடுத்­த­னுப்­பிய, நரேந்­திர மோடி, இந்­தியா வரு­மாறும் அழைப்பு விடுத்தார்.
இந்த மாதமே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை புது­டில்லி வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார் நரேந்­திர மோடி. ஆனால், பாப்­ப­ர­சரின் பயணம் மற்றும், உள்­நாட்டு நிர்­வாகச் சீர­மைப்­பு­களைக் கவ­னிக்க வேண்­டிய நெருக்­க­டிகள் கார­ண­மாக, அடுத்த மாத ஆரம்­பத்தில் புது­டில்லி வரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.
அடுத்த மாத ஆரம்­பத்தில், மைத்­தி­ரி­பால சிறி­சேன புது­டில்­லிக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அதற்­கான கால அட்­ட­வ­ணையை தயா­ரிக்கும் பணி இரு­த­ரப்பு அதி­கா­ரி­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­கி­றது. அதற்­கி­டையில், மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­றதும் அவரை முத­லா­வ­தாகச் சென்று பூச்­செண்டு கொடுத்து வாழ்த்துக் கூறி­யது, இந்­தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தான்.
அது­மட்­டு­மன்றி, கடந்த 13ம் திகதி மாலையில் புதிய அமைச்­ச­ரவை பொறுப்­பேற்ற, இரண்டே மணி நேரத்தில் புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் இருந்து தொலை­பேசி அழைப்பு கிடைத்­தது.
மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு வாழ்த்துக் கூறிய அவர், புது­டில்லி வரு­மாறும் அழைப்பு விடுத்தார். மறுநாள் காலை­யி­லேயே, 18ம் திகதி (இன்று) புது­டில்லி வரு­வ­தாக பதில் அனுப்­பினார் மங்­கள சம­ர­வீர.
இந்த நிகழ்­வுகள் அனைத்­துமே, இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தியா அவ­ச­ர­மாக காய்­களை நகர்த்தி வரு­வதை தெளி­வா­கவே உணர்த்­தி­யி­ருக்­கி­றது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி புது­டில்­லியை நிம்­மதி கொள்ள வைத்­தி­ருப்­ப­தா­கவும், அங்­குள்ள அதி­கா­ரி­களின் முகத்தில் மகிழ்ச்­சியை வர­வ­ழைத்­தி­ருப்­ப­தா­கவும், இந்­தி­யாவின் ஊட­கங்கள் பலவும் குறிப்­பிட்­டன. கடந்த பல ஆண்­டு­க­ளா­கவே மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கத்தின் நகர்­வுகள் இந்­தி­யா­வுக்கு மகிழ்ச்சி தரு­வ­தாக இருக்­க­வில்லை.
இந்­தி­யா­வுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை அவர் நிறை­வேற்றத் தவ­றி­யது மட் டு­மன்றி, சீனா­வுடன் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்டு அதனை வைத்தே, இந்­தி­யா­வுக்கு எதி­ரான காய்­ந­கர்த்­த­லுக்
கும் பயன்­ப­டுத்தி வந்தார் மஹிந்த ராஜபக்ச.
இதனால் இந்­தியா அவரைக் கையாள்­வதில் பல சம­யங்­களில் குழம்பிப் போனது. இந்­த­நி­லையில் தான், மஹிந்த ராஜபக்சவின் தோல்­வியை இந்­தியா மகிழ்ச்­சி­யோடு வர­வேற்­றி­ருக்­கி­றது. அது­மட்­டு­மன்றி, மஹிந்த ராஜபக்சவின் பத­விக்­கா­லத்தில், ஏற்­பட்டு விட்ட இடை­வெ­ளியை கூடிய விரைவில் சரி செய்து விட வேண்டும் என்ற அவ­ச­ரத்­தையும் இந்­தி­யா­விடம் கவ­னிக்க முடி­கி­றது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்­வியை, இந்­தி­யா­வுக்­காக திறந்து விடப்­பட்ட சாத­க­மா­ன­தொரு சாள­ர­மாக சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் பலரும் கரு­து­கின்­றனர். இன்று புது­டில்­லிக்குச் செல்லும், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, சுஷ்மா சுவ­ரா­ஜுடன் நடத்­த­வுள்ள பேச்­சுக்­களின் போது, இந்­தியா அந்த இடை­வெ­ளியை நிரப்ப முனை­யலாம்.
ஆனாலும் சில விட­யங்­களில், இரு­த­ரப்பு உற­வுகள் விட­யத்தில் சிக்­கல்கள் நீடிக்­கவே செய்யும் போலத் தோன்­று­கி­றது. மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கத்தின் காலத்தில், 13வது திருத்­தச்­சட்­டத்­துக்கு அப்பால் சென்று இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணத் தயா­ராக இருப்­ப­தாக இந்­தி­யா­வுக்கு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது.
அதனை இந்­தியா தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வந்­தாலும், மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் அதற்குப் பிடி கொடுக்­கா­மலே காலம் கடத்தி வந்­தது. புதிய அர­சாங்­கத்­திடம் இருந்து இந்­தியா அத­னையே எதிர்­பார்த்­தி­ருந்­தாலும், மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் அதைச் செய்­வதில் பலத்த சவால்கள் உள்­ளன.
மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்த ஜாதிக ஹெல உறு­மய ஒரு­போதும் இணங்­காது. அதை­விட, 100 நாள் செயற்­றிட்­டத்தில் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு குறித்து கவனம் செலுத்­தப்­ப­டாது என்று முன்­னரே கூறி­யி­ருந்தார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.
எனவே உட­ன­டி­யாக இலங்கை அர­சிடம் இதனை வலி­யு­றுத்­தாது போனாலும், காலப் போக்கில் அதனை இந்­தியா எதிர்­பார்க்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அத்­த­கை­ய­தொரு கட்­டத்தில், இலங்கை இந்­தி­யாவின் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட நேரி­டலாம்.
ஆனால், அதற்­கி­டையில், இலங்­கை­யு­ட­னான உற­வு­களைப் பலப்­ப­டுத்­து­வதில் இந்­தியா கணி­ச­மான முன்­னேற்­றத்தை எட்­டி­விடும் என்­பதில் சந்­தே­க­மில்லை. இலங்­கை­யுடன் உறவைப் புதுப்­பித்துக் கொள்ள இந்­தியா தீவிர அக்­கறை செலுத்தி வரும் நிலையில், சீனாவும் தனது பக்­கத்தில் இருந்து சாத­க­மான சமிக்­ஞை­களை அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்தி வரு­கி­றது,
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜி ஜின்­பிங்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு, சீனப் பிர­தமர் லீ கெகி­யாங்கும் அனுப்­பிய வாழ்த்துச் செய்­தி­களில், இலங்­கை­யு­ட­னான உற­வுகள் தொடர்­வ­தற்கு விருப்பம் வெளி­யிட்­டுள்­ளனர்.
முன்­ன­தாக, சீன வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சா­ளரும், இலங்­கையில் சீனாவின் முத­லீ­டுகள், திட்­டங்கள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு புதிய அர­சாங்கம் ஒத்­து­ழைப்பு நல்கும் என்று நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்தார்.
இதற்குக் காரணம், சீனாவின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­படும், கொழும்பு துறை­முக நகர திட்­டத்தை ரத்துச் செய்யப் போவ­தாக, ஏற்­க­னவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருந்­தது தான். புதிய அர­சாங்கம், பத­விக்கு வர முன்­னரே, சீனா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட சட்­ட­வி­ரோ­த­மான உடன்­பா­டுகள் ரத்துச் செய்­யப்­படும் என்று எதி­ரணித் தலை­வர்கள் கூறி­யி­ருந்­தனர்.
இலங்­கையில் சீனா முத­லீடு செய்­துள்ள தொகை ஒன்றும் சாதா­ர­ண­மா­ன­தல்ல. இந்த முத­லீட்டு உடன்­பா­டு­களை ரத்துச் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டால், சீனா­வுக்கு அது பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும்.
அந்த நெருக்­கடி பொரு­ளா­தார ரீதி­யா­ன­தல்ல. சீனாவைப் பொறுத்­த­வ­ரையில் இந்த தொகை வெறும் துரும்­புக்கு ஒப்­பா­னது. சீனா எதிர்­பார்ப்­பது இந்த திட்­டங்­களின் மூலம் இலங்­கையில் தனது செல்­வாக்கை பலப்­ப­டுத்திக் கொள்­வ­தாகும்.
இந்­தியப் பெருங்­க­டலில் மாத்­தி­ர­மன்றி, அதற்கு அப்­பாலும், ஐரோப்பா, ஆபி­ரிக்­கா­வுடன் தொடர்­பு­களைப் பேணும் திட்­டத்­துக்கும், இலங்­கையை முதன்­மை­யான தங்கு நாடாக வைத்­தி­ருக்க முயன்­றது சீனா.
அத்­த­கைய திட்­டங்கள் அனைத்­துக்கும் தலை­யாட்டும் பொம்­மை­யா­கவே மஹிந்த ராஜபக்ச இருந்து வந்தார்.
இத்­த­கைய முக்­கி­ய­மா­ன­தொரு கட்­டத்தில் மஹிந்த ராஜபக்ச அதி­கா­ரத்தை இழப்பார் என்று சீனா கனவில் கூட நினைத்­தி­ருக்­க­வில்லை. அதனால் தான், சீனா­வுக்கு இது கடு­மை­யான அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி, சீனா­வுக்கு பெரும் ஏமாற்றம், அதன் திட்­டங்­க­ளுக்கு பின்­ன­டைவு என்றே உல­க­ளா­விய ஊட­கங்­களில் கருத்­துக்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. எனினும், பிர­த­ம­ராகப் பொறுப்­பேற்ற பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளி­யிட்­டுள்ள கருத்து சீனா­வுக்கு சற்று நம்­பி­கை­ய­ளித்­தி­ருக்கும்.
சீனா­வு­ட­னான உற­வுகள் தொடர்ந்து வலுப்­ப­டுத்­தப்­படும் என்றும், சீனாவின் முத­லீ­டு­களை இலங்கை வர­வேற்கும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார். அவரே முன்னர், சீனா­வுடன் செய்து கொள்­ளப்­பட்ட முறை­யற்ற உடன்­பா­டுகள் ரத்துச் செய்­யப்­படும் என்று கூறியவர்.
ஆனால் பதவிக்கு வந்ததும், அவரது நிலைப்பாடு சற்று மாறியிருப்பதாகத் தெரிகிறது. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் அதன் முதலீடுகள் ரத்துச் செய்யப்பட்டால், அதற்குப் பெரும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படாது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் முதலீடுகள் மிகப் பெரிய தொகை. இதனை முழுமையாக இழப்பதற்கு புதிய அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. ஏனென்றால், அது புதிய அரசாங்கத்தின் மீதிருக்கும் மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தி விடும்.
எனவே சீன விவகாரத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொஞ்சம் பொறுமையாக, அவதானமாகவே முடிவுகளை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய விவகாரமாக இருக்காவிடினும், நீர் மூழ்கிகளின் வருகை போன்ற ஆபத்தான விவகாரங்களில் சீனாவுக்கு இனிமேல் இலங்கை ஒத்துழைக்காது என்பதையிட்டு அது ஆறுதல் கொள்ளலாம்.
ஹரிகரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila