நாட்டில் மாற்றம் பட்டதாரிகளுக்கு ஏமாற்றம் : வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கவனயீர்ப்பு


news
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
 
2012 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பிற்கு உள்ளீர்ப்பது பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்ததுடன் கடந்த கால தேர்தல்களின் போது பட்டதாரிகள் அரசேவையில் உள்ளீர்க்கப்படுவார்கள் என வடபகுதி அமைச்சர் ஒருவரினால் போலி வாக்குறுதிகள்; வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்தனர்.
 
இந்த நிலையில் வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து வேலையில்லா பட்டதாரிகளினால்; சுயமாக எவ்வித அரசியல் சாயமும் இல்லாமல் கடந்த தை மாதம் 21.01.2015 அன்று ஒன்றுகூடி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பை அடுத்து வேலையில்லா பட்டதாரிகள் சமூகம் என்ற அமைப்பை தோற்றுவித்து நிர்வாக கட்டமைப்பையும் தெரிவு செய்திருந்தனர்.
 
இதனையடுத்து குறித்த நிர்வாகத்தினால் வேலையில்லா பட்டதாரிகளின் விபரம் பாட ரீதியாக திரட்டப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபையிடமும் கையளிக்கப்பட்டது. 
 
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ஜனாதிபதி
குறித்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
 
மேலும் வடமாகாண சபைக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் விபரம் கையளிக்கப்பட்டு பட்டதாரிகளுக்கான வேலைவாய்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏகமனதாக அங்கு நிறைவேற்றப்பட்டது.
 
அடுத்து வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் பட்டதாரிகள் சமூகத்தினால் சேகரிக்கப்பட்ட தரவு சமர்ப்பிக்கப்பட்டு வேலைவாய்ப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் பலதரப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் தரவுகளுடன் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித பதிலும் அவர்களினால் வழங்கப்படாத நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
 
மேலும்  குறித்த பிரச்சினைக்கு தீர்வை உரிய தரப்பினர் எழுத்து மூலத்தில் வாக்குறுதி அளிக்கும் வரை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 
 
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila