வீட்டுத்திட்டம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுவதாக கோரி உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜே. 208 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று காலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது உடுவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றதுடன் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் பிரதேச செயலர் ஊடாக அரச அதிபருக்கு பிரதேச மக்கள் வழங்கியுள்ளனர்.