முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க, கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. யோசித கடற்படையில் இணைந்து கொண்ட விதம், பிரித்தானிய பாதுகாப்பு கல்லூரியில் புலமைப் பரிசில் கிடைத்த விதம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதுவும் லண்டனில் அவருக்கு எவ்வாறு கடல்படை தொடர்பான புலமை பரிசில் கிடைத்தது என்பது பெரும் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள்.
கடற்படைத் தளபதிக்கு, பாதுகாப்புச் செயலாளர் உடனடியாக இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். ஜே.வி.பி கட்சி செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக பிரித்தானிய அரசு எதனையும் அறிவிக்கவில்லை. இன் நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. போலியாக இவர் கடல்படையில் இணைந்திருந்தால் பெரும் சிக்கலில் மாட்டிகொள்வார் என்று கூறப்படுகிறது.