வாழைச்சேனை பகுதிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் இன்று விஜயம் செய்ததுடன், அவரது ஊரான பேத்தாழைக்குச் சென்று உறவுகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார். அவருடன் முன்பு வழங்கப்பட்ட அத்தனை பாதுகாப்பு பிரிவினரும் சென்றுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்ட பெரும்பாலனவர்களின் வீடுகளில் நேற்று இரவு சிலர் கை வாள்களுடன் வெள்ளை வானில் சென்று அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவக்கப்படுகிறது.
அத்துடன், விநாயகபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால் இன்று நடாத்த ஏற்பாடாகியிருந்தது.
அந்த நிகழ்வு மரத்தின் கீழ் இடம்பெறவிருந்ததை அறிந்து, குறித்த மரத்தை இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு வாளால் அறுத்துள்ளனர். மக்கள் அதனைக் கண்டு கூச்சலிட்ட வேளை மரத்தை வெட்டியவர்கள் ஓடி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கூட்டம் நடைபெறவிருந்த இடத்தைச் சேர்ந்த இளைஞன், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தமையால் முற்பகல் 10 மணியளவில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி வீதி வழியாக சென்று கொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.
21 வயதுடைய ஜெயரெட்ணம் ஜெயகாந் எனப்படும் இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இவரைக் கடத்திச் சென்ற குழுவினர் அவரது, வீட்டுக்கு அருகாமையில் உள்ள பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலய அருகில் வைத்து அவரை பலவாறு தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தமது ஊரில் இருக்கும்போது நடைபெற்றுள்ளது.
குறித்த குழுவினரிடமிருந்து தப்பியோடிய இளைஞர் கல்மடு விநாயகபுரம் மருதநகரில் உள்ள தனது வீட்டுக்குச் வந்து சேர்ந்துள்ளார்.
இச்செய்தியை கேள்வியுற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உடனடியாக அவரின் வீட்டுக்கு சென்று பாதிக்கப்பட்ட இளைஞனை பார்வையிட்டு தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் சென்றார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் கல்குடா பொலிஸ் நிலைய பகுதியில் வசிப்பதால் அங்கு முறையிட்டார்.
சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பகுதியில் இடம்பெற்றமையால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று இவ் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அத்தோடு பாதிக்கப்பட்ட இளைஞனை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பார்வையிட்டு அவரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இவ்விடயம் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கவனத்துக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.