கூட்டமைப்பிலிருந்து டெலோவும் வெளியே?

lktelo

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஆசனப்பகிர்வினையடுத்து டெலோ இயக்கமும் மனக்கசப்படைந்துள்ளதாக தெரியவருகின்றது.இதனையடுத்து அக்கட்சியின் மத்திய குழு நாளை செவ்வாய்கிழமை மாலை அவசர அவசரமாக வவுனியாவில் ஒன்று கூடுகின்றது. 21பேர் கொண்ட மத்திய குழு கூடவுள்ளதை உறுதிப்படுத்திய கே.சிவாஜிலிங்கம் நேற்றைய சந்திப்பு மகிழ்ச்சி தரவில்லையென்பதாலேயே அவசர கூட்டம் கூட்டப்படுவதாக தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தவிசாளர் பதவி பெறும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்கு அந்தச்சபையில் 60 வீதமான வேட்பாளர்களை நியமிப்பது என்றும் ஏனைய இரு கட்சிகளும் எஞ்சிய 40 வீதத்தை 20 : 20 எனப்பங்கிடுவதும் என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.lktelo
இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடுவது என்றும் கூட்டமைப்பினில் எஞ்சியுள்ள மூன்று கட்சிகளான டெலோ,புளொட்,தமிழரசு முடிவு செய்துள்ளன.
தேர்தலில் வென்ற பின்னரே தவிசாளரைத் தீர்மானிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.தவிசாளர் நிறுத்தப்படும் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்­pபெறும் வேட்பாளர்களின் சதவீதம் 60 ஆக இல்லாவிட்டால் விகிதாசார அடிப்படையில் கிடைக்கும் நியமன ஆசனங்களைத்தவிசாளர் தெரிவாகும் கட்­சிக்கு வழங்கத்தீர்மானிக்கப்பட்டது.
தவிசாளர் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டால் மற்றைய கட்சிக்கு உப தவிசாளர் பதவி வழங்கப்படுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய மார்டின் வீதி தமிழரசு தலைமையக கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டபோதும் வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளை தமிழரசு தனது கைகளுள் வைத்து செயற்பட தொடங்கியிருக்கின்றது.இது டெலோ மற்றும் புளொட் தரப்பிற்கு அதிர்ச்சியையும் சீற்றத்தையும் தந்துள்ளது.
சந்திப்பின் பின்னர் மாவை சேனாதிராசா ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதும் டெலோ சிறீகாந்தா இறுகிய முகத்துடன் வெளியேறியிருந்தார்.இதேவேளை சித்தார்த்தன் தனது கட்சி சார்பில் சென்ற பிரதிநிதிகளிடம் ஊடகங்களிற்கு ஏதும் சொல்லவேண்டாம் தன்னிடம் வாருங்களென அவசர பணிப்பினை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் வன்னியின் தற்போது தான் தமிழரசு கால் ஊன்ற தொடங்கியுள்ள நிலையில் அதனை வளர்த்து நாடாளுமன்ற தேர்தலில் மண்கௌவ வேண்டிவருமென டெலோ பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்தே நாளை மத்திய குழு கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளதாக தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila