உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்நாட்டு விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.
கடந்த கால உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமைகள் வெற்றியளிக்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் வரையில் தமிழ் சமூகம் காத்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படுவதனை தமாதப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பும் அமெரிக்காவும் உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹ_செய்னினால் இந்த மார்ச் மாத அமர்வுகளில் விசாரணை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் கிரமமான விசாரணை நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.