கடற்படை வாழ்விடமாகும் காங்கேசன் துறைமுகம்

காங்கேசன்துறை துறைமுகம் இராணுவ மயமாக்கப்பட்டு முழுவதும் இராணுவ தேவைக்குட்படுத்தப்பட்டுள்ளது.  துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்hன ரணதுங்க நேற்றைய தினம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சென்றிருந்தார்.அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் பல கெடுபிடிகளுக்கு பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது காங்கேசன்துறை முழுவ தும் கடற்படையினரால் பலத்த கண்கா ணிப் பிற்கு உட்படுத்ததப்பட்டுள்ள கடற்படையின் தேவைக்கு உட்டுபத்தப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

சிறியளவு யுத்தக் கப்பல்கள், இந்திய மீன வர்களின் றோலர் படகுகள் பாரிய கடற்படை படகுகள் என்பனவும் காங்கேசன்துறை முகத்தில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள காங் கேசன்துறை முகம் பார்வைக்கு விறுவிறு ப்பாக இயங்கிக் கொண்டிருப்பது போல காட்சியளித்தது.

படையினருக்கான வெதுப்பகம், நூலகம், சிற்றூண்டிச்சாலை என அனைத்து வசதி ளும் ஏற்படுத்தப்பட்டு சிறுநகர் போல் குறிப்பாக இராணுவ குடியிருப்பு போன்று அவ் இடம் தோற்றமளித்தது.

மேலும் கடற்படையினரின் இவ் கட்டமைப்புக்களினை படம் பிடித்த ஊடகவிய லாளர்களினை கடற்படையினர் தடுத்ததோடு கண்காணிப்பிற்கும் உட்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila