உள்நாட்டலுவல்கள், கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் எச்.எம்.பி.பீ.பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் சனாதிபதிதை தனிப்பட்ட முறையில் சந்தித்து அளவளாவினார். அதன்போது வடக்கின் மீனவர் பிரச்சினைகள்பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.