யாழில் பொலிஸார் வர்த்தகரை மிரட்டி கப்பம் பெற முயற்சி! மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாங்கள் பொலிஸார் எமக்கு பணம் கொடுத்தால் உனக்கு நல்லது. என நகைக்கடை வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பெருந்தொகை பணத்தை கப்பமாக கேட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் யாழ்.மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.கஸ்தூரியார் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் ச.மோகனதாஸ் என்பவரின் வீட்டிற்கு (பிறவுண் வீதி) கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்ற நெடுங்கேணி பொலிஸார் அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்று உள்ளதாக கூறி (LG - 9591) என்ற இலக்கம் கொண்ட பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் 0242053008  என்ற இலக்கத்திலிருந்து அழைப்பு எடுத்த பொலிஸார் 10 பவுண் நகை மற்றும் பணம் கொடுத்தால் தந்தையை விடுவிப்போம் என வீட்டிலிருந்த குறித்த மோகனதாஸின் மகனுக்கு கூறியிருக்கின்றனர்.
இதன் பின்னர் மகன் யாழ். மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
இதன் பின்னர் ஆணைக்குழு நடத்திய விசாரணையின் போது தாங்கள் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை. என கூறிய பொலிஸார் பின்னர் ஆணைக்குழுவின் கேள்விகள் கடுமையாக அமைந்தமையினையடுத்து கைதுசெய்ததாக ஒத்துக் கொண்டனர்.
பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஆணைக்குழு கேட்டபோதும் அவ்வாறு ஆஜர்படுத்தாமல் இருந்த பொலிஸார், சம்பவம் நடைபெற்று 3 தினங்களின் பின்னர் அதாவது நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில், குறித்த நபரை ஆஜர் செய்து கடந்த வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் இவருக்கு தொடர்புள்ளதாக கூறி அவர்மீது பொய் குற்றச்சாட்டு ஒன்றினை பதிவு செயது 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கேட்ட கப்பம் கொடுக்கவில்லை. என்பதற்காகவே தனது தந்தை மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக மகன் கூறியிருக்கின்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila