சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடையுமா?
தேர்தலில் தாம் தோல்வியைத் தழுவவில்லை எனவும் சூழ்ச்சித் திட்டமொன்றின் மூலம் தோற்கடிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தாம் தோல்வியைத் தழுவவில்லை எனவும் சூழ்ச்சித் திட்டமொன்றின் மூலம் தோற்கடிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விசேட செய்தியொன்று வாசிக்கப்பட்டது.
இந்த விசேட செய்தியில் குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிடக் கூடுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.