இனி வெளியே வரமுடியாது என்று பலர் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீர் என்று கோட்டை நீதவான் அவருக்கு பிணை வழங்கினார். இதனை எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்க இரகசிய பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்த போதும் நாமல் ராஜபக்ஸவிடம் முன்னதாகவே பேசிக் கொண்டதற்கு அமைய கோட்டை நீதவான் திலின கமகே பிணை வழங்கியதாக தற்போது தெரியவந்துள்ளது. திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்குவதற்கு முன்னர் கோட்டை நீதவான் திலின கமகேவின் அலுவலகம் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திஸ்ஸவிற்கு பிணை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
திலின கமகேவின் மஹரகம வீட்டில் மீட்கப்பட்ட யானைக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய தேசிய வருமான வரி திணைக்கள கணக்காளர் நாயகம் (அசிட் தாக்குதலுக்கு உள்ளான) லலித் அம்பன்வலவிடம் இருந்து திலின கமகேவை காப்பாற்றியது நாமல் ராஜபக்ஸ என்பது பிரபல இரகசியமாகும். திஸ்ஸ அத்தநாயக்க போலி ஆவணம் தயாரித்தமைக்கு போதி ஆவணம் இல்லை எனத் தெரிவித்தே திலின கமகே பிணை வழங்கினார்.
ஆனால் திஸ்ஸ அத்தநாயக்க ஊடக சந்திப்பில் வெளியிட்ட ஆவணத்தில் இருந்த கையொப்பம் போலியானதென அரச இரசாயக பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கையொப்பங்களை போலியாக பயன்படுத்தி ஆவணம் வெளியிட்டமை சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என இரகசிய பொலிஸார் கூறியதை கணக்கிலெடுக்காது நீதவான் பிணை வழங்கியமை விசேட அம்சம். இதன்காரணமாகவே நீதவானுக்கு சிவப்பு எச்சரிக்கை அரசால் கொடுக்கப்பட்டுள்ளது.