அவற்றை துரத்திச் சென்று , நீண்ட தொலைவுக்கு அப்பால் கொண்டு போய் விட்டு விட்டு தான் திரும்பியுள்ளது. ஒரு சமயத்தில் இந்த 2 நாட்டு போர் விமானங்களும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதனை ரஷ்ய விமானிகள் வீடியோபடமாக எடுத்து, தமது நாட்டுக்கு கொடுத்துள்ளார்கள். அதனை பாதுகாப்பு அதிகாரிகள் ரஷ்ய தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளார்கள். இதேவேளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமது விமானங்களை இவ்வாறு மிரட்டினால், அவர்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்பு கருதி இனி தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக அது அணு குண்டு தாக்குதல் என்பதனை ,அவர் சொல்லாமல் சொல்லி மிரட்டியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கமரூனும் பேசியுள்ளார். ரஷ்யா குறிப்பாக ஒரு செய்தியை எமக்கு சொல்ல வருகிறது. அதனை அவர்கள் நேரடியாகச் சொல்லலாம். நாம் எதனையும் எதிர்கொள்ள தயார் என்று பிரதமர் டேவிட் கமரூன் மேலும் தெரிவித்துள்ளார்.