திருகோணமலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிவித்தலை விடுத்தார். சம்பூரில் பொதுமக்களை மீளக்குடியேற்றம் செய்வது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் சம்பூரில் முதலீட்டு வலயத்துக்காக ஒதுக்கப்பட்ட 814 ஏக்கர் காணி சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு மீள்க்குடியேற்றப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அதியுயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன்படுத்தப்படும் 234 ஏக்கர் காணிக்கு பதிலாக வேறு காணி கடற்படையினருக்கு வழங்கப்பட்டு குறித்த காணி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்