வயாவிளான் கிழக்கில் பாதுகாப்பு வேலி மக்கள் கண்முன்பாக இராணுவத்தினர் நடவடிக்கை

news
 இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த நிலங்களிலேயே குடியமர்த்தப்படுவார்கள் என்று அரசு தெரிவித்து வரும் நிலையில், வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்குப் பிரதேசங்களில், மக்களின் கண்முன்பாகவே இராணுவத்தினர் புதிய நிரந்தரப் பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 
வசாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட காணிகள் பொதுமக்களிடம் விடுவிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு அமைய, மக்கள் நேற்று குறித்த பகுதிக்குச்   ஆனால் இராணுவத்தினர், 2012 ஆம் ஆண்டு ஒட்டகப்புலத்தில் அமைத்த நிரந்தர பாதுகாப்பு வேலிகளைப் பின்நகர்த்தாமல் அப்படியே வைத்திருந்தனர்.
 
வல்லை  அராலி பிரதான வீதியை மாத்திரம் திறந்து விட்டிருந்தனர். அதனூடாக மக்கள் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் மாத்திரம் சென்றனர். வீதி யின் இரு பக்கமும் நிரந்தர பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக் கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டி ருந்தனர். 
 
தோலகட்டிச் சந்திக்கு நூறு மீற்றர் தூரத்துக்கு முன்பாக, வீதியை ஊட றுத்தும் நிரந்தரப் பாதுகாப்பு வேலியை அமைக்குப் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். பைக்கோ இயந்தி ரத்தின் உதவியுடன், மக்கள் கண்முன் பாகவே அவர்களது காணிகளையும் வீடுகளையும், வளர்ந்துள்ள காட்டு மரங்களையும் வெட்டிச் சரித்து, உள்ளகப் பாதை மற்றும் நிரந்தரப் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி யில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
 
இந்த நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பின்னரே ஆரம் பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் குறித்த பகுதிக்கு அரச அதிகாரிகள் சிலர் வந்து பார்வையிட்டுள்ளனர். அப் போது இவ்வாறான எந்த நடவ டிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை. மக்களை மீள்குடியமர்வுக்கு அனுமதித்த பின்னரே, இந்த நடவடிக் கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
 
நேற்று மக்கள் கண்முன்பாகவே, அவர்களது காணிகளுக்குச் செல்வதைத் தடுத்த இராணுவத்தினர், நிரந்தர பாதுகாப்பு வேலியை,  பிரதான வீதியின் இரு மருங்கிலும், வீதிக்குச் சமாந்தரமாக அமைக்கும் பணியில் ஈடுபட் டனர்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila