வெளிநாடு சென்றிருந்த சந்திரிக்கா நாடு திரும்பியவுடன் நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பற்றி விசாரித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் நடைபெறும் கூட்டத் தொடர் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
மஹிந்தவிற்கு அரசாங்கம் எவ்வாறான சலுகைகளை வழங்குகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
இதன் போது பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதனை தெரிந்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி எனக்கு அவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை, மஹிந்தவிற்கு இத்தனை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்கு வழங்கக் கூடாது என சந்திரிக்கா கூறியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்தவின் பாதுகாப்பு வாகனங்களை அகற்ற நடவடிக்கை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனங்கள் அகற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நோக்கில் வழங்கப்பட்டிருந்த விசேட வாகனங்கள் பல அகற்றப்பட உள்ளன. சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.இன்று முதல் இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.
முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்கள் இவ்வாறு அகற்றப்பட உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.