ஜனவரி 8ஆம் திகதி தேர்தலின் பின் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏதோ ஒருவழியில் நன்மைவரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த மக்களின் நிலைப்பாடுகள் இப்பொழுது சிறிது சிறிதாக தகர்ந்துக் கொண்டு போகின்றது என்பதோடு, பல உதாரணங்களை நாம் பார்க்க கூடியதாக உள்ளது.
அதில் பாகுபாடான பல சம்பவங்கள் நடந்தேறியும், நடந்துக்கொண்டும் இருக்கின்றது. இதன் பலாபலன்கள் தமிழ் மக்களை தவிர்ந்த ஏனைய சிங்கள மக்களின் பக்கம் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. அதிலும் சிங்கள அரசியல் தலைமைகளின் ஆட்சி பீட பலத்தை தக்கவைக்கும் நிலையும் அதிகரித்துக் கொண்டு இருப்பதை,காணக்கூடியதாக உள்ளது. இதில் பெரும்பான்மை கட்சிகளின் பலப் பரீட்சையும் சிறுபான்மை தமிழ் கட்சிகளின் பிளவுகளுக்கும் காரணமாகி வருவதையும் காணலாம்.
இது மட்டுமல்லாது, சர்வதேச ரீதியாகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளின் ஆர்வம், நோக்கு, அனுதாபம் மற்றும் உணர்வுகள் சிறிது சிறிதாக தகர்ந்து வரும் நிலையும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
காரணம் யார்?
இந்த சம்பவங்களுக்கு காரணம் யார் என்றால் அது தமிழ் இனமும், அரசியல் தலைவர்களின் நிபந்தனையற்ற தேர்தல் ஆதரவுமா என எண்ணத் தோன்றுகின்றது.
அது மட்டுமல்லாது, புதிய ஜனாதிபதியின் வருகையுடன் நமது பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு என்ற நம்பிக்கையும், தளர்ச்சியடைந்து வருகின்றதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
மாற்றம் என்ன?
இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்ற பெரும்பான்மை கட்சிகள் தங்களின் இருப்புக்களை பலப்படுத்தவும் சிங்கள மக்களின் மனதை கவர்ந்து கொள்ளவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடயங்களின் ஊடக மகாநாட்டை நடாத்தி அதன் மூலம் பிரச்சாரங்களை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றன.
இதன் மூலம் சிங்கள மக்களை தன்வசப்படுத்த பலவித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
நிலைப்பாடுகள் என்ன?
ஐ.ம.சு.மு, ஐ.தே.க இந்த இரண்டு பெரும்பான்மை கட்சிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஆட்சியை வைத்துக் கொள்ள பல திட்டங்களுடன் செயல்படுகின்ற இந்த வேளையில் ஐ.ம.சு.மு அங்கத்துவ கட்சிகளின் பெரும்பான்மையை கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பெயரையே இப்பொழுது அதிகமாக பயன்படுத்தி வருகின்றது.
தேர்தலுக்கு முன் ஐ.ம.சு.மு என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்தது இக்கட்சியை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டும் வந்தது. இப்பொழுது ஐ.ம.சு.மு என்ற பெயர் சிறிது சிறிதாக அழிந்துகொண்டு இருக்கின்றது.
ஐ.ம.சு.மு கூட்டில் இருந்த ஏனைய சில இனவாத தலைவர்கள், மகிந்தவிற்கு விசுவாசமானவர்கள் மாத்திரமே ஐ.ம.சு.மு என்ற பெயரை இப்பொழுதும் பயன்படுத்தி தங்களின் இழந்த பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
இதன் மூலம் ஐ.ம.சு.மு- ஸ்ரீ.ல.சு.க என்ற இருபிரிவுகளை சிறிது சிறிதாக வளர்ச்சியடையக்கூடிய நிலை உருவாகி வருகின்றது.
எனினும் இந்த இருகட்சிகளுக்கும் தலைவராக இப்போதைய ஜனாதிபதி மைத்திரியே இருக்கின்றார் ஆகவே இதன் பின்னணியில் இருந்து செயல்படுபவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இருக்கின்றர்.
இவர் பழிவாங்கும் குணத்துடன் செயல்படுபவராக இருப்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு மிக பாதகமான நிலையையே தோற்றுவிக்கும். இந்த இடத்தில் இந்தியாவின் காங்கிரஸ் தலைவி சோனியாவின் பழிவாங்கும் செயல்களை சற்று நாம் நினைவில் வைத்து பார்க்க வேண்டும்.
அவர் விடுதலைப் புலிகளை அழிக்க மேற்கொண்ட செயல்பாடுகளுக்கு ஏற்ற முறைமையாகவும் மாறலாம். அதன் விளைவுகள் ,பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் தொடர்ச்சியான கைதுகள், கொலைகள் என்ற கணக்கில்லா செயல்பாடுகளுக்கு பின்னால் இந்தியாவை வழி நடத்தியதை உதாரணமாக கருதலாம்.
அவ்வாறான நிலையை சந்திரிக்கா, மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படுத்துவாரா, இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எப்படியாகினும் ஆட்சியை தொடர்ந்து ஐ.ம.சு.மு என்ற பெயரை விடுத்து ஸ்ரீ.ல.சு.க என்ற பெயரில் தொடரவே மைத்திரியும் சந்திரிக்காவும் முயற்சிக்கின்றார்கள். அதற்கு ஓர் தற்காலிக உதவியையே ஐ.தே.கவிடம் இருந்து பெற்று, மஹிந்த ராஜபக்ஷவின் பதவியை இழக்க செய்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை தன் பிடியில் வைக்கவே சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ரணிலையும், ஏனைய கட்சிகளையும் பயன்படுத்தியுள்ளார் என்பது எதிர்கால வெளிச்சமாகும்.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சி நேரடியாக மஹிந்தவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரத்தை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றி, ஆட்சியை தன்வசப்படுத்த எல்லாவிதமான விட்டு கொடுப்புகளுக்கும் தயாரான நிலையில் தோல்வி பெறுகின்ற தலைவன் என்பதை அகற்றிக் கொண்டார் ரணில்.
ரணில் செயற்பட்ட விதமும் பாராட்ட கூடியது. அவர் பெற்ற அந்த தற்காலிக வெற்றியை நிரந்தரமாக்க இதுதான் சந்தர்ப்பம் என்ற நோக்கோடு அடுத்த நகர்வாக பொது தேர்தல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டு செயற்படுகின்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம்
இந்த கட்சி பிரச்சார யுக்திகளையே அதிகமாக பயன்படுத்தி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற காவல்காரனாக செயற்படுகின்றது. (WATCH DOGS) இதற்கு இவர்கள் கட்சியின் விசுவாசிகள்.
அரச திணைக்களங்களில் இருந்து அங்கு நடக்கும் சகல சட்டவிரோத, அல்லது முரணான செயற்பாடுகளை ஆதாரத்துடன் இவர்களின் கட்சிக்குகு தெரிவிக்கின்றது.
இதன் மூலம் அவர்கள் ஊடகத் துறையையும் பாராளுமன்றத்தையும் விளம்பர யுக்திகளுக்காக மிகவும் சாதூர்யமாக பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த கட்சியின் ஆதரவானவர்கள் அனேகமாக கல்வியறிவுடையவர்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.
இவர்களின் எண்ணமும் எதிர்வரும் பொது தேர்தல் மூலம் எதிர்க்கட்சியாக பலம் பெற வேண்டும் என்பதே.
தமிழர்களின் நிலையும் எதிர்காலமும்
ஆட்சி செய்த இரு கட்சிகளும், ஆட்சி செய்த காலங்களிலேயே இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட விடயங்கள் தீயாய் சுடர்விட்டு தமிழினத்தினை அழித்து கொண்டு இருந்தது. இதை நியாயபடுத்த இந்த இரண்டு கட்சிகளுமே தங்களின் முழு சக்தியையும் பயன்படுத்தியது.
தமிழர்கள் இலங்கையில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களின் பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய பொதுவாக தடைகளையே ஏற்படுத்தி வந்தது என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு இலங்கையின் உண்மையான நிலையை மறைத்தும் அதை நியாயப்படுத்தவும் பிரச்சாரங்களை மிகவும் திட்டமிட்டு செயல்படுத்திய சாணக்கியர்கள் பலர் இந்த இருகட்சிகளிலும் உள்ளதை நாம் மறக்க கூடாது.
இவர்கள் ஆளும் போது ஒன்றும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றையும் கூறி வருவது ஆச்சரியப்படக் கூடியவிடயமல்ல.
இவர்கள் இன்று மைத்திரியின் கீழ் ஒன்றுபட்டுவிட்டார்கள் ஆகவே இவர்களுக்கு சகல வளங்களும் வாய்ப்புகளும் இப்பொழுது மிகவும் அதிகமாகவே உள்ளது. இதை இவர்கள் நிச்சயம் முழுமையாக இப்பொழுது பயன்படுத்தி வருகின்றார்கள் என்பது உண்மை.
இதை நமது தமிழ் அரசியல்வாதிகள் புரிந்திருக்கின்றார்கள். ஆனால் புரியாத புதிராக நடந்து கொண்டிருக்கிறார்கள் என நினைக்கலாம்.
நமது அரசியல் தலைமைகள் திறமையான சாணக்கியர்களே. ஆனால் அவர்களும் சாதாரண மனிதர்களே இதை அவர்கள் என்றும் எப்பொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் திறமையானவர்களே என்ற வீராப்பு மாயையின் அடிமைகளாகவே இருப்பதால் இவர்கள் ஒருபோதும் யதார்த்தத்தைப் புரிந்துக்கொள்ள முடியாதவர்களா? என்ற எண்ணம் எமக்குள் இருக்கின்றது.
இந்த நிலையில் புதிய அரசின் வருகை நமக்கு ஓர் தற்காலிக மன நிறைவு கொடுத்ததன் பலன் நமது அரசியல் தலைமைகளின் மகிழ்ச்சி அவர்களின் கருத்துக்கள் ஊடக மூலமாக வெளியான கருத்துக்கள் முறைகள் அனைத்தும் ஆளும் புதிய அரசுக்கு மூலதனமாகிவிட்டது.
இதன் தொடர்ச்சி தமிழகத்தில் அகதி முகாமில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் நமது உறவுகளை மீண்டும் இந்நாட்டு அனுப்ப இந்தியா அரசு செய்து வரும் ஏற்பாடுகள் தொடர்ப் பேச்சுக்கள் போன்றவைகளை நன்கு பயன்படுத்தி மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவின் திட்டத்தை செயல்பாடுகளை விளம்பரப்படுத்தி, புதிய அரசு பதவிக்கு வந்ததன் பின் தமிழ் மக்களின் பிரச்சினைகளை துரிதமான தீர்க்க செயல்படுவதை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.
(மகிந்த ராஜபக்ச புலம்பெயர்ந்து வாழும் மக்களை மீண்டும் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தார்) ஆனால் இந்தியாவின் நிலையையே ஏனைய மேற்குலக நாடுகளும் பின்பற்றினால், நிலைமை எவ்வாறு மாறும் என்பதை நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
மேலும் பிரதமர் மோடியின் வருகைக்கு பின் இந்நாட்டின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு ஆதரவானால், இந்தியா தமிழர்களின் இன பிரச்சினையைவிட சீனாவிற்கு எதிராகப்போகும் இலங்கை அரசின் பிரதிநிதியாகவே செயல்படலாம்.
இந்த நிலையில் சர்வதேசமும் இந்தியாவையே பின்பற்றலாம் இது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பாதகமாகலாம் இதையே இலங்கை அரசு எதிர்பார்க்கும்.
ஆனால் நடப்பது என்ன?
உண்மையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தபின் நாட்டில் தமிழர்கள் மீதுள்ள பாகுபாடுகள் குறைந்துள்ளதாக வெளியில் தெரிந்தாலும் அப்படியான நிலையான செயல்பாடுகள் இன்றும் இல்லை எனலாம். கைதுகள் தொடர்கின்றது. அதற்கு உதாரணம்.
நாட்டில் முன்னைய அரசு காலத்தில் ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள், கொலைகள், ஆட்கடத்தல்கள் பொலிசாரின் முறையற்ற செயற்பாடுகள், படையினரின் சட்டவிரோத செயல்கள், அரசியல்வாதிகளின் போதைபொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுத வியாபாரம், நிதி மோசடி என அரசால் அரசியல்வாதிகளினால் அம்பலப்படுத்தப்பட்டு அதற்கு காரண கர்த்தாக்களைக் கைது செய்ய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் அவ்வாறானவர்களை கைது செய்யாமைக்கு கூறும் காரணம், விசாரணை முழுமையாக இடம்பெற்று அதில் அவர்களின் தொடர்பு சம்பந்தமான சகல ஆவணங்களையும் தயார் செய்த பின்பே சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் முன்னைய அரசுபோல் கைது செய்து விசாரணையை நடாத்தப்பட மாட்டாது என்றும் அதுதான் நல்லாட்சியின் கொள்கையென நியாயப்படுத்தும் சதூர்யமான பதிலை தெரிவிக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து அதன்பின்பே விசாரணை அதற்கான கால நீடிப்பும் இப்பொழுதும் நடைபெறுகின்றது.
தட்டி கேட்போருக்கு முடிந்த கதை முடிந்ததே எனவும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் வருந்துவதாகவும் தமிழ் மக்களுக்காக அரசு கைவசம் வைத்திருக்கும் வார்த்தைகள். இதிலும் சட்டம் இருபிரிவாக பாகுபாடாக செயல்படுவதை இன்றும் காண்கின்றோம். வருந்துகின்றோம்.
இந்த அடிப்படையிலேயே தற்போதைய அரசு சர்வதேச நாடுகளின் விஜயம் குறிப்பாக மேற்கத்தேய நாடுகளிடம் மிகவும் நாசுக்காக நல்லுறவுடன் செயல்படுவதாக பிரச்சாரங்களை ஏற்படுத்தி பல அரசியல் வெற்றிகளை குவித்துக் கொண்டு இருக்கின்றது.
அதன் ஒருபகுதியாக ஜனாதிபதியின் இந்தியா விஜயம், பிரித்தானியா விஜயம், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியீடு தாமதம் போன்றவைகளை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் இருந்து நாம் நன்கு எதிர்கொண்டிருப்பது இப்பொழுது சர்வதேச நாடுகள் அணைத்தும் புதிய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை கொடுக்கின்றது.
அதன் வெளிப்பாடே அமைச்சர்களும், ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரின் செயற்பாடுகளும் என்ற மாயை மிக துரிதமாக ஊடுருவிக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் இந்த சர்வதேச நாடுகள் உள்ளூரில் பாரிய இன நல்லிணக்க செயல்பாடுகள் நடைபெறுவதாக எண்ணுகின்றது. ஆகவே அவர்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் கோரலாம்.
உங்கள் நாடு அமைதி பூங்காவாகிவிட்டது. நீங்கள் உங்கள் உறவுகளுன் சென்று வாழும் நிலையை புதிய அரசு தோற்றிவிட்டது என்று ஆலோசனை வழங்கலாம் அல்லது நாடு கடத்த ஏற்பாடுகளை செய்யலாம்.
அவ்வாறு நடைபெற்றால் வெற்றி யாருக்கு தமிழருக்கா அல்லது அரசுக்கா எமது அரசியல் தலைமைகளே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.. இன்று நாட்டில் அதிகமாக அரசியல் தலைவர்கள் பேசுவது இன பிரச்சினை பற்றியதா அல்லது அரசை கைப்பற்ற அல்லது கைப்பற்றியதை தொடர்ந்து நடாத்துவது சம்பந்தமாகவே.
தமிழரின் பிரச்சினையை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் கையில் இருக்கும் போதே நிறைவேற்றாது, அதை இழந்து பாராளுமன்றின் மூலம் தீர்க்க நினைப்பது எவ்வாறு என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.
அரசோ தமிழ் மக்கள் குறிப்பான புலம்பெயர்ந்து வாழும் மக்களின் சக்தி ஈழமக்களின் உந்து சக்தியாகிவிட்டதை நன்குணர்ந்து அதை அழிக்க சர்வதேசத்துடன் நல்லுறவு என்ற பெயரில் அங்கும் அவர்களின் பொருளாதார நிலையை அழித்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவந்து அகதி வாழ்க்கை என்றால் இலங்கைக்கே சொந்தம் என்பதை உறுதிப்படுத்தலாம்.
நமது அரசியல் தலைவர்கள் மாற்று வழியை ஏற்படுத்தி எமது மக்களின் பிரச்சினைகளை சிங்கள பொது மக்களின் நாளாந்த பிரச்சினையாக மாற்றி, அவர்களின் மனதை வெற்றி கொள்ளும் வழியை செய்தால் சர்வதேசத்தை மட்டும் நமது பிரச்சினைகளை தீர்க்க பயன்படுத்தாது தமிழ் மக்களின் வாக்குளை பெற்ற நீங்கள் உங்கள் நடவடிக்கையாக சிங்கள மக்களிடம் உங்களுக்குள்ள வளங்களை பயன்படுத்தி நிலையை எடுத்து சொல்லுங்கள்.
அவர்களின் மனதை வெல்லுங்கள் சிங்கள தலைமையை மாத்திரம் நம்பிவிடாமல், உங்களின் கடமையை தமிழ் மக்களின் நிலையை சிங்கள மக்களிடமும் எடுத்து செல்லுங்கள்.
அவர்களுக்கு தமிழ் மக்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துங்கள். புலம் பெயர்ந்துவாழும் மக்களைப் பற்றி கூறுங்கள் அவர்களின் வேதனைகளை விளக்குங்கள். அரசின் நல்லுறவை தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படுத்துங்கள் இதுவே எமது கோரிக்கையாகும்.
இந்தியா தனது நலனில் அக்கறையாக உள்ள நிலையில் தமிழர் பிரச்சினையில் அழுத்தம் கொடுப்பதை தவிர்க்கலாம். அதையே ஏனைய நாடுகளும் தொடரலாம். அது மேற்குலக நாடுகளில் வாழும் நமது உறவுகளை பாதிக்காமல் இருக்க தமிழ் அரசியல் தலைவர்கள் அவதானமாக இருப்பது முக்கியம்.
மகா.