உத்தேச 19ம் திருத்தச் சட்டம் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்மும் அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நிறைவேற்று அதிகார முறைமையின் தேவையற்ற அதிகாரங்களை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்றிரவு வரையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் அச்சிற்கு வரவில்லை என அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தது.
இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கு அரச அச்சக் கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆயத்தமாக இருந்த போதிலும், ஆவணம் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.