தமிழின அழிப்பின் புதிய ஆவணப்படம்! ஐ.நா மண்டபத்தில் கண்ணீர் சிந்திய பிரதிநிதிகள்.

ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்..
இந்த ஆவணப்படத்தினை தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னனி இயக்குநர் கௌதமன் பலத்த சிரமத்தின் மத்தியில் இயக்கியுள்ளார். கடந்த புதன்கிழமை ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIONAL” என்ற அமைப்பின் சார்பாக மாநாடு இடம்பெற்றது. இம்மாநாடு OCAPROCE INTERNATIONAL அமைப்பின் தலைவி தலைமையில் இடம்பெற்றதுடன், இதில் பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளரான செல்லத்துரை ரஜனி, தமிழ் நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு.மணிவண்ணன், உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி. அங்கயக்கன்னி, செல்வி உமாசங்கரி நெடுமாறன் என பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிலேயே இனவழிப்புத் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila