அவன்கார்ட் நிறுவனம் சர்வதேச ஆயுத விற்பனையில் ஈடுபட்டது: பாதுகாப்பு ஆய்வாளர்கள்

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தனியார் பாதுகாப்பு நிறுவனமான அவன்கார்ட் நிறுவனம் யுத்தத்திற்கு பின்னர், அரசாங்கத்திடம் இருக்கும் மேலதிக ஆயுதங்கள் மற்றும் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய சிறிய ரக ஆயுதங்களை சர்வதேச ரீதியில் விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரக்னா லங்கா நிறுவனத்தின் சார்பில் தாம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அவன்கார்ட் நிறுவனம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இது உண்மையாக இருந்தால், ஆயுத விற்பனையில் சம்பாதித்த வருமானம் தேசிய திறைசேரிக்கு கிடைத்தா? எவ்வளவு தொகை கிடைத்து என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அவன்கார்ட் நிறுவனம் இலங்கைக்கு வெளியில் ஓமான் கடற்பரப்பிலும் செங்கடல் பகுதியிலும் அல்-ஜசீரா துறைமுகத்திலும் மூன்று மிதக்கும் ஆயுத கப்பல்களை வைத்துள்ளது.
இதனைத்தவிர காலி துறைமுகத்திலும் மொரீசியஸ் நாட்டிலும் கென்யா நாட்டிலும் ஆயுத களஞ்சியங்களை கொண்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனம் ஜீபோர்ட் நாட்டின் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் DMSS நிறுவனத்துடன் நெருங்கிய வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளது.
DMSS நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீபோர்ட் நாட்டின் ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளராவார்.
DMSS நிறுவனம் மிதக்கும் ஆயுத கப்பல்கள் மூலம் கறுப்புச் சந்தையில் ஆயுதங்களை விற்கும் நிறுவமாகும்.
அவன்கார்ட் நிறுவனம் DMSS நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் ஆயுதங்களை விற்பனை செய்ததா என்பது குறித்து தேடிப்பார்க்க வேண்டும் எனவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila