அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்: ‘உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே ஜெயகுமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் யாரும் குற்றப்பத்திரிகை இன்றி தடுத்து வைத்திருக்கப்படக்கூடாது. ஜெயகுமாரி விடயத்தில் அதுதான் நடந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் குற்றப்பத்திரிகை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. எதிர்காலத்தல் பூசா தடுப்பு முகாமினை மூடவேண்டியதான ஒரு நிலைமை ஏற்படும் என்று நினைக்கின்றேன். இலங்கை அரசாங்கம் பலரை புனர்வாழ்விற்கு உட்படுத்துகின்றது. புனர்வாழ்வு என்பது அவர்களின் விருப்பத்துடன் வழங்கப்பட வேண்டுமே தவிர பலவந்தமாக அல்ல. ஆனால் இங்கு புனர்வாழ்வானது பலவந்தமாகவே வழங்கப்பட்டுள்ளதென நினைக்கின்றேன். அதேபோல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இதுபோன்று விடுதலை செய்யப்படவேண்டும். அவர்களின் விடுதலைக்கான எமது போரட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் அரசியல் தலைமைகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை. குறிப்பாக கூட்டமைப்பினர் இது தொடர்பில் காத்திரமான ஒரு வேலைத்திட்டத்தை செயற்படுத்தவில்லை. அவர்கள் தமது சுய இலாப அரசியலுக்காகவே செயற்படுகின்றனர். அவர்கள் தமது பதவிகளைக் காப்பாற்றுவதிலும், ஐ.நா அறிக்கையினை பிற்போட்டமை குறித்து மகிழ்ச்சியிலும் இருப்பார்களாயின் அது பாரிய துரோகமாகும். எனவே தமிழ் அரசியில் கைதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் சட்டரீதியாக நாம் போராட தயாராகவே உள்ளோம்’ என்றும் கூறினார். |
உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்களால் தான் ஜெயகுமாரி பிணையில் விடுதலை! - சட்டத்தரணி கே.எஸ். ரத்தினவேல்
Add Comments