பிரித்தானியாவில் ஆபத்தில் முன்னாள் போராளி! உதவுவது யார்....

பிரித்தானியாவில் ஆபத்தில் முன்னாள் போராளி! உதவுவது யார்…??
இலங்கையில் இடம் பெற்ற கொடிய யுத்தத்தில் தமிழிழ விடுதலைப் புலிகளின் காவல் துறையில் இருந்த முன்னாள் போராளி இன்னும் சில தினங்களில் உயிராபத்தை எதிர் கொண்ட நிலையில் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ளார்.
இவ் விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழிழ விடுதலைப்புலிகளின் காவல் துறையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு யுத்த இறுதிக்காலம் வரை பணிபுரிந்த கண்ணன் காளிமுத்து என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு செபரம்பர் மாதம் 29ஆம் திகதி உயிராபத்தை எதிர் கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து பிரித்தானியா கெற்வீக் விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் அங்கேயே தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது இம்மாதம் 20 ஆம் திகதி மீண்டும் நாடுகடத்தப்படவிருக்கின்றார்.
மேலும் இவர் ஜோசப் முகாமில் 5ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடும் சித்திர வதைகளை அனுபவித்ததோடு அதன் காரணமாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருந்தார்.
அத்துடன் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது வாழவழியின்றி சிறையில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
இத்தகைய நிலையில் இவர் நாடு கடத்தப்படுவார் என்றால் உயிராபத்தை எதிர்நோக்க நேரிடும். ஏனெனில், தமிழீழ காவல் துறையின் முன்னால் உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் 12.11.2014 அன்று சுட்டுக் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இத்தகைய நிலையில் இன்னும் 8 நாட்களில் நாடு கடத்தப்படவிருப்பதாகவும் தான் நாடு கடத்தப்பட்டால் தன் உயிருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளதாகவும் தன்னை காப்பாற்றுமாறு எமது இணைய தளத்திற்கு தொடர்புகொண்டு கதறியழுதார்.
அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க மனித நேய அமைப்புக்கள், புலம்பேர் தமிழர்கள், ஊடகங்கள் கைகொடுத்து உதவ வேண்டும்.
ltte
- See more at: http://www.asrilanka.com/2015/03/12/28092#sthash.CfDFGL1c.dpuf
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila