புதிய அரசுக்கெதிரான சுதந்திர தின சதி முயற்சியும் தொடரும் இராணுவ தலைமை மாற்றங்களும்


கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இடம்பெற்ற தேசிய தின கொண்டாட்டங்களுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெற்றிருந்த புலனாய்வு எச்சரிக்கையயான்று பற்றிய செய்தியே தேசிய ஒருமைப்பாட்டு அரசின்  ஒரு பகுதியினர் மத்தியில் அப்போதைய பேச்சாக அடிபட்டுக்கொண்டிருந்தது.

முழு விபரத் தெளிவற்ற மேலோட்டமான எச்சரிக்கையாக அது இருந்த போதிலும் கோட்டே- சிறிஜெயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு வெளியே இடம்பெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள விருக்கும் அரச தலைவர் ஒருவரையோ தலைவர்களையோ இலக்கு வைத்தே அத்தாக்குதல் நடைபெறவிருக்கும் சாத்தியக் கூறு பற்றியே அத்தகவல் எச்சரிப்பதாக அமைந்திருந்தது.

1981 ஆம் ஆண்டு எகிப்தில் இடம்பெற்ற இராணுவ அணி வகுப்பு மரியாதையயான்  றினைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அப்போதைய எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் அவர்கள், அணிவகுப்பில் வந்துகொண்டிருந்த இராணுவ வாகனங்களிலிருந்து குதித்த வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட அதே பாணியை ஒத்த நிகழ்வு போன்றதாகவே இதுவும் இடம்பெறவிருந்தது. அந்த எகிப்திய சம்பவத்தில் இராணுவ வாகனங்களிலிருந்து குதித்த வீரர்கள் மேடையிலிருந்த தலைவர்களுக்கான அதிவிசேட பகுதி மீதே சூட்டினை ஆரம்பித்திருந்தனர்.

புலனாய்வு எச்சரிக்கையினை பெற்றிரு ந்தவரான அரச பாதுகாப்புச் செயலர் பி.எம். யு.டீ  பசநாயக்க அதுபற்றி ஜனாதிபதி சிறிசேனாவை எச்சரித்து உசார்ப்படுத்தியதுடன் எதிர்நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான சந்திப்புக்களையும் தலைமை தாங்கி வழிப்படுத்தியுமிருந்தார்.

கட்டுப்பாட்டை மீறி எதுவும் இடம்பெற்று விடாதபடி நிலைமையை உறுதி செய்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளனைத்தும் எடுக்கப்பட்டதாக அரச பாதுகாப்புத் தரப்பினர் கூறினர். எப்படியும் துல்லியமான இலக்கோ இலக்குகளோ பற்றிய தகவல்களுடன் எச்சரிப்புக்கான காரண கர்த்தாக்களாகக் காணப்படக்கூடிய எவர் பற்றிய எந்தவித தகவல்களையும் கசியவிடாத அந்த எச்சரிக்கைத் தகவல்மூலம், கிடைத்த அத்தகவலை “நம்பத்தகுந்த ஒன்றாக மட்டுமே” அடையாளப்படுத்தியிருந்தது.
இது இப்படியிருக்க, ஏற்கனவே இத்தக வலுக்கு முன்னர், இலங்கையின் இந்த 67 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்களை இம்முறை பெருமெடுப்பில் அல்லாது குறிப்பிடத்தக்க அளவில் மதிப்பிற்குரிய, ஆடம்பரமற்ற ஒரு அடக்கமான நிகழ்வாக நடத்துவதற்கே ஜனாதிபதியவர்கள்  தயாராகியிருந்தார்கள். பலவித ஆயுத தளபாட காட்சிப்படுத்தல்களோ ஜெட்சண்டை விமான சாகச பறத்தல்களோ இல்லாமலும் நூற்றுக் கணக்கிலான பாடசாலை சிறார்களை குவித்து மணிக்கணக்கில் நிறுத்தி வைத்துப் பார்ப்பதற்கோதானும் அவர் விரும்பவில்லை.

முன்னைய அரசாங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடைய சொந்த இடமாகிய வீரகெட் டியவில் இவ்வித சுதந்திரதின கொண்டாட்டங்களை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கான விரிவான ஏற்பாடுகளை பெரும் செலவின் மத்தியில் பெருமெடுப்பிலேயே செய்து வந்துள்ளது. இவ்வித ஆடம்பரங்களுக்கு மாற்றுவழியாக புதிய ஜனாதிபதி சிறிசேன அவர்களால் தெரிந்துகொள்ளப்பட்டதே குறிப்பிடத்தக்கதும் அடக்கமானதுமான இப்புதிய வழிமுறையாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட எகிப்திய நிகழ்வுக்கு முன்னர் 1973 இல் நடந்த ‘யயாம்கிப்பூர்’ போரின் போது  சமய அனுஸ்டான  ‘சுயயஸ்’ கால்வாயைக் கடந்து எகிப்து நடத்திய அதிரடித்தாக்குதலில் ‘சினாய்’ வளைகுடாப்பகுதி இஸ்ரேலிய ஆக்கி ரமிப்பிலிருந்து மீளவும் கைப்பற்றப்பட்டது. எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்தின் வெற்றிச் சாதனையாக இது அமைந்தது. இப்போரின் அலைகள், பிற்பாடு அமெரிக்க உதவியினால் இஸ்ரேலுக்கு சாதகமாக திரும்பிய போதிலும் அதனைத் தொடர்ந்து எகிப்தும் இஸ்ரேலும் புதிய உடன் படிக்கையின் கீழ் சமாதானத்திற்குள்  பிரவேசித்திருந்தமை ஜனாதிபதி சதாத் அவர்களின் மற்றுமோர் வெற்றிகர சாதனையாகவே பார்க்கப்பட்டது.

சுயயஸ் கால்வாய் கடந்து எகிப்தினால் மேற்கொள்ளப்பட்ட அந்த வெற்றிகர தாக்குதலை நினைவுகூரும் விதத்தில் 1981 ஒக்ரோபர் 17 இல் நிகழ்ந்ததே மேற்கூறப்பட்ட எகிப்திய வெற்றிப்பவனியான  அந்த வருடாந்த இராணுவ அணிவகுப்பாகும். அந்த அணிவகுப்பின் போதான ஜெற் சண்டை விமானங்களின் சாகசங்களை சதாத் அவர்கள் அவதானித்துக் கொண்டிருந்த போதே மேற்கூறிய அந்த படுகொலைத் தாக்குதலின் இலக்காகிய அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.

அன்றைய எகிப்திய நிகழ்வு அவ்வாறிருக்க;-இன்றைய இலங்கையின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் பிரதம கட்டளைத் தளபதியுமான ஜனாதிபதி சிறிசேன அவர்கள் கடந்த மாத இறுதி வாரங்களில் ஆயுதப் படைகளின் உயர் பதவிகளுக்குப் பொருத்தமான அதிகாரிகளைத் தெரிந்து கொள்வதில் ஈடுபாடு காட்டியிருந்தார்.

புதுடில்லி விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் நாடு திரும்பியவுடன் ஆரம்பித்த இந்த பணியில் முதலிரண்டு நாட்களுக்குள்ளேயே அவரது முதல் வேலை இராணுவத்திற்கான கட்டளைத் தளபதி ஒருவரது புதிய தெரிவாக இருந்தது. இதற்காக அரச தலைவர்கள் சிலரது ஆலோசனைகளையும் அவர் பெற்றிருந்தார். அவர்களுள், விடுதலைப் புலிகளுக்கெதிராக வெற்றிகரமாக படை நடத்தியவரும் தற்போது ஜனநாயக கட்சியின் தலைவராகவுமிருக்கும் ஜெ.சரத் பொன்சேகாவும் ஒருவராகும்.

இந்த முன்னாள் தளபதியும் பொருத்தமான சிலரது பெயர்களை சிபார்சு செய்திருந்த போதிலும் சிறிசேனாவின் விருப்பத்திற்குரிய தெரிவாக றோயல் கல்லூரியின் பழைய மாணவரும் முன்னைய அரசில் ஒரு மேஜர் ஜெனரலா கவுமிருந்த ஸ்ரீசாந்த டி சில்வாவே தெரிவாகினார்.

முன்னைய ஆட்சியின்போது ஆகக் கூடுதல் தகுதி வாய்ந்த ஓர் மூத்த அதிகாரியாயிருந்தும் பொருத்தமான அப்பதவிக்கு நியமிக்கப்படாமல் அதற்குப் பதிலாக ரஷ்யா விற்கான இலங்கைத் துணைத்தூதுவராகவே  அவர் அப்போது நியமிக்கப்பட்டிருந்தார். இதுவரையில் இப்பதவியில் இருந்தவர் லெப்.ஜென. தயாரட்ணாயக்க என்பவரேயாவார். ஏனைய உயர் பதவிகளுக்கான நியமனங்கள் வெகு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இராணுவத் தளபதியயாருவர் நியமனம்  பெறுவதற்கு முன்னரே இராணுவத்தில் அடுத்தடுத்த உயர்பதவிகளுக்கான மாற்றங்கள் சிலவும் இடம்பெற்றிருந்தன. கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதியிலிருந்து பதவிகளில் அமர்த்தப்பட்ட அநேகர், ஜெனரல் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்களாக பரந்தளவில் கருதப்பட்டவர்களேயாவர்.

அவர்களுள், வன்னிப் பிராந்தியத்திற்கான புதிய பொதுக் கட்டளைத் தளபதியாக (‘றூநுளீ’) மேஜர் ஜென. அமல் கருணாசே கரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இராணுவ புலனாய்வு டிரெக்டர் ஜெனரலாக (‘ம்றூனிணூ’) இருந்த இவர் எகிப்தில் இருந்து கொண்டே எரித்திரிய நிலைமைகளை அவதானிப்பதற்கென்று நியமிக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாயிருந்த எரித்திரிய முன்னாள் ‘அஸ்மரா’ அரசு இலங்கை ராஜதந்திரி ஒருவரை ஏற்றுக் கொள்ள மறுத்ததன் பின்னரே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் இறுதியில் ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தன்னை அறிவித்துக்கொண்டதன் பின்னர் அரசினால் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளின்போது ‘ளீணூம்’ பிரிவினருடன் ஒத்துழைக்கும்படி முன்னைய அரசு கேட்டுக்கொண்டதுடன் அவரை ஊக்குவித்திருந்தபோதும் அவற்றை உதாசீனப்படுத்தி எதிர்த்து வந்தவரே இந்த மேஜர் கருணாசேகராவாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila