வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோர், இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும் இரவோடிரவாக அது பிற்போடப்பட்டுள்ளது.
முன்னதாக வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவினால் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த போதும் பின்னர் அரசியல் தலையீடு காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இதுவரைகாலமும் கடமையாற்றிய இ.ரவீந்திரன், கல்வி அமைச்சின் செயலாளராகவும் கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன், மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும் மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.வரதீஸ்வரன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விடமாற்றங்கள் தொடர்பினில் முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆர்வம் கொண்டிருந்த போதும் அண்மைய நாட்களினில் பல்வேறு குற்றச்சாட்டுக்களிற்குள்ளாகிவரும் விவசாய அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரது தூண்டுதலிலேயே ஆளுநருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினையடுத்து அவை 6மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
Add Comments