தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் ஆட்சி மாற்றத்தினால் எதுவுத் ஆகவில்லை அவுஸ்.தூதுவரிடம் முலைமைச்சர் தெரிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு எவ்வித மாற்றமும் நடைமுறையில் நிகழவில்லை என யாழ்.வந்த அவுஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் காலை 9.00 மணியளவில் விமானம் மூலம் பலாலியை வந்தடைந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி முன்னதாக யாழ்.மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையினை ஆயர் இல்லத்தில் காலை பத்துமணியளவில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பின்னர் காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரினை அவரது வாசஸ் தலத்தில் அவுஸ்திரேலிய தூதுவர் சென்று சந்தித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்;,

இங்கு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பலதரப்பட்டவர்களினையும் சந்தித்து சென்றுள்ளார்.

குறிப்பிட்ட சிலவிடயங்களை மட்டும் அவர் கதைக்கவில்லை. இங்குள்ள சூழ்நிலைகள் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அதிகமாக அவர் கேட்டறிந்திருந்தார்.

புதிய ஆட்சியில் ஜனநாயகம் எவ்வறான நிலையில் உள்ளது. வடக்கில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்ன என்றவாறெல்லாம் அவர்கேட்டறிந்து கொண்டார். இதற்கு புதிய ஆட்சியின் போது நாம் எதிர்பார்த்த விடயங்கள் ஒன்றும் பெரிதாக நடை முறைப்படுத்தப்படவில்லை என்பதனை அவருக்கு தெரியப்படுத்தினேன்.

இதற்கு இங்கு தொடர்ந்தும் நல்லிணக்க நடவடிக்கைகளினை புரிந்துணர்வு நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தங்களால் முடிந்தளவு உதவிகளை செய்யும் என தூதுவர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.        
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila