கோத்தபாயவின் உத்தரவில் நேவிசம்பத்தின் வெள்ளைவான் குழுவினரே ரவிராஜினை படுகொலை செய்தனர்

கோத்தபாயவின் உத்தரவில் நேவிசம்பத்தின் வெள்ளைவான் குழுவினரே ரவிராஜினை படுகொலை செய்தனர் –

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நேவிசம்பத்  என்பவரின் வெள்ளைவான் குழுவினரே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ரவிராஜினை படுகொலை செய்துள்ளமை பெருமளவிற்கு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 திகதி நாரஹென்பிட்டியில் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த படுகொலைதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், கடற்படையை சேர்ந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் சம்பத்முனசிங்க என்ற அதிகாரியையும்,பிரசாத் ஹெட்டியாரச்சி என்ற அதிகாரியையும் கைதுசெய்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் ரவிராஜினை கொலை செய்யுமாறு அரசபுலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் மகில் டோல் என்பவர் தமக்கு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட நபர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நேரடி உத்தரவின் கீழ் செயற்பட்டவர்.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் செயற்பட்ட மரணக்குழுக்கள் பலவற்றின்நேரடி இணைப்பாளராகவும் மகில் டோல் செயற்பட்டார்.அக்காலப்பகுதியில் நேவி சம்பத், விசேட அதிரடிப்படையின் கொடித்துவக்கு, விமானப்படையின் நிஜாந்த கஜநாயக்க, மற்றும் இராணுவத்தை சேர்ந்த சானக பெரேரா போன்றவர்கள் இவ்வாறான குழுக்களை இயக்கியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரவிராஜினை ஏன்கொல்ல வேண்டும் என நேவிசம்பத் கேள்வி எழுப்பிய வேளை பாதுகாப்பு செயலாளர் அவ்வாறு உத்தரவிட்டுள்ளார் என மகில் டோல் என்ற அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரவிராஜினை மோட்டார்சைக்கிளில் வந்தவர்களே சுட்டுக்கொன்றனர் . அவர் அவ்வேளை தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

குறிப்பிட்ட மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்தது, பொலிஸ் உத்தியோகத்தர் செனெவி என தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நபரும் வெள்ளைவான் குழுவில் இணைந்து செயற்பட்டவர். அவருடன் அந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த  கடற்படை அதிகாரி செனிவரத்தின என்பவரே ரவிராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார்.

குறிப்பிட்ட மோட்டார்சைக்கிளை அடிப்படையயாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள்மூலம் இது தெரியவந்துள்ளது.

ரவிராஜின் படுகொலைக்கு சில வருடங்களுக்கு பின்னர் விடுதலைப்புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் டோல் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ரவிராஜ் கொலை குறித்த முக்கியமான தகவல்கள் தெரியவந்து உள்ளதால் டோல் தற்போதைக்கு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், எனினும் கோத்தபாயவை காப்பாற்றுவதற்காக, டோல் கைதுசெய்யப்படுவதை பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த நபர் ஓருவர் தடுத்துவருகின்றார், என தெரியவருகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila