உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன், பிரித்தானிய உள்துறை செயலாளர் ஹம்பர் ரூட் மற்றும் வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் பேரிஸ் ஜோன்சன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளார்.
பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ இலங்கை திரும்பியமைக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.எனினும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.
இங்கு தங்கியிருக்கும் அவர்களின் விசாக்களை ரத்துச் செய்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
பிரித்தானியா மற்றும் நாட்டு வசிப்போரின் நலன் பாதுகாப்புக்கும் வகையில் செயற்பட உள்துறை செயலாளருக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய குடியேற்ற விதிகளின் படி இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைக்கப்படும் முன்னர் குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் விசா விதிமுறைகளில் மாற்றங்களை செய்திருக்க வேண்டும்.
பிரிகேடியர் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ராஜதந்திர விசா கொள்கைகளின் அடிப்படையில் சார்ந்திருக்க கூடிய விசா அனுமதியே வழங்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பெர்னாண்டோவின் இராஜதந்திர விசா அனுமதி ரத்துச் செய்யப்பட்டிருக்குமாயின் அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதியிருக்காது.
இதனால், அவர்களின் விசா அனுமதியை ரத்துச் செய்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுப்பதாகவும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.