இனவாதத்தை தூண்டுகிறார் தினேஷ் குணவர்தன

ராஜபக்ச குடும்பத்தினரை மீண்டும் அதிகாரத்தில் அமரவைக்கும் திட்டத்தின் பங்காளியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன அடிப்படைவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் மிகவும் கீழ் நிலைக்கு சென்றுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று வெளியான பத்திரிகை ஒன்றில் அவரது இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குள் புத்தசாசனத்தை அழிக்கும் சதித்திட்டங்கள் இருப்பதாக தினேஷ் குணவர்தன அந்த பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் புத்தசாசனத்தை அழிக்கும் சதித்திட்டம் என்ற தலைப்பில் அவரது இந்த செய்தி வெளியாகியிருந்தது.
முற்றும் முழுதான பொய்யான கருத்துக்களை முன்வைத்துள்ள தினேஷ் குணவர்தன மத அடிப்படைவாதத்தை தூண்ட முயற்சித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்னவொன்று எவருக்கு தெரியாது எனவும் மக்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் நாடு உலகில் எங்குமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் குணவர்தன இவ்வாறு கூறியிருந்தாலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பத்திரிகைகளில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களில் கடந்த 17 ஆம் திகதி அந்த திருத்தச் சட்டத்தின் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், வேண்டும் என்றே பொய்யான தகவல்களை முன்வைத்துள்ள குணவர்தன, திடீரென கொண்டு வரப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு இணக்கத்தை வெளியிட்டதுடன் மகிந்த ராஜபக்சவை அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரியாக மாற்றவும் உதவியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி -  19ம் திருத்தம் பௌத்தத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதவேண்டும்!- தினேஸ் - 19ன் விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila