குரோத உணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன மற்றும் மதக் குரோதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இலங்கை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை முன்னாள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாசுதேவ நாணயக்கார அமைச்சராக இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இன மற்றும் மதக் குரோதத்தை தூண்டுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடி;ககை எடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுபல சேனா போன்ற கடும்போக்குடைய அமைப்புக்களின் சில செயற்பாடுகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.