முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கு கனேடிய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கனேடிய அரசாங்கம் விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்த எடுத்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புவநேசன் துரைராஜா என்ற நபரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தார்.
கனேடிய அரசாங்கம் விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்த எடுத்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புவநேசன் துரைராஜா என்ற நபரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தார்.
துரைராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் வரி திரட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், துரைராஜா நாடு கடத்தப்பட்டால் ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடுமென நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புலி உறுப்பினருக்கு கனடா பாதுகாப்பு வழங்க வேண்டுமென நீதவான் தெரிவித்துள்ளார்.