நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு சில அரசியல் கட்சிகள் குடாநாட்டு குடிதண்ணீர் பிரச்சினையைத் தமது நலனுக்காகப் பயன்படுத்துகின்றன.
அவர்கள் மக்களை தேவையற்றுப் பதற்றமடையச் செய்கின்றனர்.தீர்வை முன்வைக்க அவர்கள் தயாராக இல்லை.மக்களை பதற்றமடையச்செய்து அரசியல் செய்வதே அவர்களின் நோக்கம் என்று வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிதண்ணீர் பிரச்சினையில் அக்கறையுடையோர் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு தமது தீர்வுகளை முன்வைக்க வேண்டும்என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடாநாட்டு குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று நீண்ட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக சில அமைப்புக்களை சில அரசியல்வாதிகள் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பயன்படுத்தி குடிநீர்ப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள்.அவர்கள் மக்களைத் தேவைக்கு அதிகமாக பதற்றமடையச் செய்துள்ளனர்.இதனைக் கைவிட வேண்டும் என்று வடக்கு முதல்வர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.