பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்தமை நல்ல சந்தர்ப்பமாக காணப்பட்ட போதிலும் வடக்கு மாகாண முதலமைச்சரினை ரணில் புறக்கணித்தமையால் பிரதமரின் வடக்கு விஜயத்தினை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என யாழ்.வந்த ஜேர்மனிய தூதுவரிடம் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலும் கொள்கை மாற்றம் காணப்படுவதால்தான் இருவரும் சந்திப்பை ஏற்படுத்தாமல் முரண்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் மக்களினை பொறுத்தவரையில் கருத்து மாற்றங்கள் எதுவுமில்லை எனவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜேர்மனிய தூதுவர் ஜர்ஜென் மொர்ஹாட் யாழில் பலசந்திப்புக்களினை மேற்கொண்டிருந்தார்.இதிலொரு சந்திப்பாக முற்பகல் பத்துமணியளவில் யாழ்.ஆயரினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு தொடர்பில் யாழ். ஆயர் மேலும் தெரிவிக்கையில பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு பயணம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார். ரணில் வடக்கிற்கு விஜயம் செய்தமை நல்ல ஒரு சந்தர்ப்பமாக காணப்பட்டிருந்தது. எனினும் அவ் விஜயத்தில் வடக்கு மக்களில் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சரினை புறக்கணித்திருந்தார்.
மக்கள் தமது பிரதிநிதியினை புறக்கணித்தமையால் ரணிலின் வருகையினை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதே நேரம் ரணிலின் வருகை வடக்கு மாகாண சபைக்கும் மத்திய அரசிற்கும் இணக்கத்தினை ஏற்படுத்தும் நல்ல தருணமாக காணப்பட்ட போதிலும் அதனை அனைவரும் தவறவிட்டுள்ளனர். ஆகையால் ரணிலின் வருகையினால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
வடக்கிற்கு ரணில் விஜயம் செய்தபோது பல நன்மையான காரியங்களை செய்துள்ளார். ஆயிரம் ஏக்கர் காணியினை முதற்கட்டமாக விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
இது மக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணிகளை விடுவித்த நிலையில் மக்கள் மீள் குடியேற்றுவதற்கு உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். அவற்றை அவர்கள் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இதே போல் மக்கள் செல்ல முடியாத ஆலயங்க ளினையும் விடுவித்து வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.
புதிய அராசாங்கம் மீள் குடியேற முடியாதுள்ள ஏனைய மக்களையும் மீள்குடியேற்றி மீள்குடி யேற்றப்பட்ட மக்களிற்கு மீள்குடியேறுவதற்கான உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும் ஜேர்மனிய தூதுவரிடம் யாழ்.ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.