தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட மே 18ஐ நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என புதிய அரசாங்கம் அறிவித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
கடந்த அரசாங்கம், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்தது. இந்நிலையில் புதிய அரசின் இந்த அறிவிப்பானது சிறப்பானது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாக கொண்டாடாமல், நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று அறிவித்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்நிலையிலேயே, தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பை சாதகமானதாகப் பார்க்கிறார்.
ஆனால் போரில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள், சிறையில் இருப்பவர்கள் என்று போர் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற குறியீட்டளவிலான அறிவிப்புகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, போரில் உயரிநீத்த சகலருக்கும் அஞ்சலி செலுத்தலாம் என அரசாங்கம் அறிவித்ததுடன், அந்த தினம் ஒரு இனத்தை அடிமைப்படுத்தும், ஓர் இனத்தை வெற்றிக்கொண்ட தினம் அல்ல மாறாக நாட்டை பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினம் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மே 18 நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாம்! - இந்த அறிவிப்பானது சிறப்பானது சமந்தன்
Related Post:
Add Comments