வவுனியா, பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த காணிகளற்ற மக்கள் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக குடியிருக்கின்றார்கள். அவர்களுக்கு இன்னும் காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை. மீள்குடியேற்றத்திற்கான எந்தவித உதவிகளும் கிடைக்காது மிகவும் வறுமை நிலையில் தமது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அதிகளவிலான மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக கலாபேவஸ்வேவ பகுதியில் காலி, அம்பாந்தோட்டையில் இருந்து அழைத்து வரப்பட்ட 5ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. செட்டிகுளம், பாவற்குளம் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இம்மக்கள் குடியிருக்கும் பகுதியில் தொழிற்சாலை அமைக்கப் போவதாக கூறி இவர்களை வெளியேற்ற முயற்சிகளைச் செய்தார். எனினும் அரச அதிகாரிகளுடன் பேசி அது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களை அப் பகுதியிலேயே குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, இந்த அரசாங்கம் இந்த மக்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி அவர்களுக்கான காணிகளை வழங்கி அவர்களும் சராசரி மனிதர்களாக வாழ வழியை யேற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். |
வவுனியாவில் 5000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! - சிவசக்தி ஆனந்தன்
Related Post:
Add Comments