தாஜூடீன் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர் விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் கொலை செய்யப்பட்டார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வசீம் தாஜூடீனின் மரணம் சம்பந்தமான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்டு வரும் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன. விசாரணை அறிக்கையை வெளியிட்டால், இறுதியான விசாரணைகளுக்கு அது அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி அதிகாலை நாராஹேன்பிட்டி நகரில் பிரபல றகர் விளையாட்டு வீரரான வசீம் தாஜூடீன் தனது வாகனத்திற்கு எரியுண்ட நிலையில் உயிரிழ்ந்து கிடந்தார்.தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று அன்றைய காவற்துறை ஊடகப் பேச்சாளராக இருந்த அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தார். தாஜூடீன் பயணித்த கார் மதில் ஒன்றில் மோதியத்தால், கார் தீப்பிடித்ததில் அவர் இறந்து போனதாகவும் அஜித் ரோஹன கூறியிருந்தார்.இறக்கும் போது 28 வயதாக இருந்த தாஜூடீனின் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.யோஷித்த ராஜபக்சவின் காதலி ஒருவர் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாக தாஜூடீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. |
றகர் வீரர் தாஜுதீன் கொலை செய்யப்பட்டது உறுதி! - அமைச்சர் ஜோன் அமரதுங்க
Add Comments